மலேசியத் தற்காப்பு அமைச்சுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (3.7 பில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள இரண்டு நீர்மூழ்கிகளை விற்பனை செய்யப்பட்டதை புலனாய்வு செய்யும் பிரஞ்சு மாஜிஸ்திரேட்டுக்கள், இதர பல விஷயங்களுடன் பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவை முக்கிய தலைமை அதிகாரியாகக் கொண்டு ஹாங்காங்கில் இயங்கிய Terasasi (Hong Kong) Ltd என்னும் நிறுவனத்தையும் இலக்காகக் கொண்டுள்ளனர்.
Terasasi வழியாக செலுத்தப்பட்ட 36 மில்லியன் யூரோவில் (144 மில்லியன் ரிங்கிட்) குறைந்தது சிறிதாவது, Thales International அல்லது Thint Asia-விடமிருந்து இரண்டு நீர்மூழ்கிகளும் வாங்கப்பட்ட போது தற்காப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த நஜிப்பின் பைகளுக்குப் போயிருக்க வேண்டும் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரஞ்சு அரசாங்கத்துக்குச் சொந்தமான தற்காப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் DCNS என பின்னர் அழைக்கப்பட்ட DCNம் 2002ல் ஆண்டு இணைந்து நீர்மூழ்கிக் கலங்களை கட்டுவதற்கு Armaris என்னும் கூட்டு நிறுவனத்தை அமைத்தன.
மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், நஜிப்பின் தந்தையும் இரண்டாவது பிரதமருமான துன் அப்துல் ரசாக் ஆகியோரது பெயரிடப்பட்டுள்ள அந்த Armaris நீர்மூழ்கிகள் இப்போது மலேசியக் கடற்பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
2006ம் ஆண்டு மங்கோலிய மொழி பெயர்ப்பாளர் அல்தான் துயா ஷாரிபு மரணம் தொடர்பான விசாரணையில் மய்யமாக இருந்த ரசாக் பகிந்தா அந்த ஹாங்காங் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களில் ஒருவர் என பட்டியலிடப்பட்டிருந்தது. (ரசாக் பகிந்தா, மலேசிய சிந்தனைக் களஞ்சியம் ஒன்றின் முன்னாள் தலைவரும் ஆவார்) அந்த நிறுவனம் ஏற்கனவே 2002ம் ஆண்டு ஜுன் மாதம் 28ம் தேதி Kinabalu Advisory and Support Services Ltd என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டு ஹாங்காங் நிறுவனப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.
ரசாக் பகிந்தாவின் தந்தையார், அப்துல் ஹாலிம் பகிந்தா இன்னொரு இயக்குநர் ஆவார்.
ஹாங்காங்கின் வான் சாய் மாவட்டத்தில் 3 Lockhart Road-ல் உள்ள ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் Terasasiயின் அலுவலகம் அமைந்திருந்தது.
அந்த நிறுவனம் என்ன தொழில் செய்து வந்தது என்பதற்கு ஹாங்காங் அரசாங்கத்திடம் எந்த ஆதாரமும் இல்லை. அது ‘உள்ளூர் நிறுவனம்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. என்றாலும் Terasasiக்கு தொடர்ச்சியாக பணம் வந்து கொண்டிருந்ததாக பிரஞ்சு அதிகாரிகள் நம்புகின்றனர்.
அவற்றில் ஒன்று 360,000 யூரோவாகும் (1.44 மில்லியன் ரிங்கிட்) ஆகும். அதனுடன் “ரசாக் அது விரைவாக கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்,” எனக் கூறும் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பணம் Thint Asiaவிலிருந்து Terasasiக்கு அனுப்பப்பட்டது என்பதைக் காட்டும் ஆவணங்கள் மாஜிஸ்திரேட்களிடம் இருக்கின்றன- மலேசியாவை தளமாகக் கொண்டிருந்த போது 3 மில்லியன் யூரோவும் (12 மில்லியன் ரிங்கிட்) அது ஹாங்காங்கில் இணைக்கப்பட்ட பின்னர் 33 மில்லியன் யூரோவ்வும் (132 மில்லியன் ரிங்கிட்) அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.
அந்தப் பணம் எங்கு சென்றது என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. என்றாலும் அம்னோ அதிகாரிகளுக்கும் நஜிப்புக்கும் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் 146 மில்லியன் யூரோவின் (585 மில்லியன் ரிங்கிட்) ஒரு பகுதி என கூறப்படுகிறது. DCNS நிறுவனத்திடமிருந்து நீர்மூழ்கிகளை மலேசியர்கள் வாங்கிய அந்த வேளையில் நஜிப், ரசாக் பகிந்தாவுடன் பல முறை பிரான்ஸுக்கு பயணம் செய்துள்ளார்.