பிஎஸ்சி சிறுபான்மை அறிக்கையை அமைச்சரவை விவாதிக்கும்

மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சமர்பிக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அறிக்கையுடன் எதிர்த்தரப்பின் சிறுபான்மை அறிக்கையின் உள்ளடக்கத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது.

பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் தயாரித்த அறிக்கையைத் தாம் இன்று அமைச்சரவையில் சமர்பித்ததாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். என்றாலும் அந்த அறிக்கைகள் அடுத்த வாரம்தான் விவாதிக்கப்பட முடியும் என்றார் அவர்.

“நான் இன்று அமைச்சரவையில் அந்த விவகாரத்தை கொண்டு வந்தேன். ஆனால் மாக்ஸிமுஸ் ஒங்கிலி இப்போது வெளிநாட்டில் இருப்பதால் நாங்கள் அடுத்த வெள்ளிக்கிழமை அதனை ஆய்வு செய்வோம்,” என நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.

TAGS: