BERSIH 3.0 குறித்து ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் நிலைப்பாடு

நிகழ்கால மலேசியத் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற
BERSIH  அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தமது ஆதரவை
தெரிவித்து கொள்கிறது.

மலேசிய இந்தியர்கள் இனரீதியாக வஞ்சிக்கப்படுவதை மாற்ற வேண்டுமென்றால் அடிப்படை கொள்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் கருத்தோடு BERSIH  நடவடிக்கைகளும் அமைவதே இதற்கு காரணமாகும்.

Bersih  2 .0 பேரணியின் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட நாடாளுமன்ற  தேர்வு குழுவின் (PSC) செயல்பாடுகளில் மன நிறைவு கொள்ளாமல், பாக்கத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட சிறுபான்மை அறிக்கையை தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி
நம்மிடையே புதிய சரித்திரத்திற்கு அடிகோலும் வகையில் நடத்தப்படவிருக்கும்  குந்தியிருப்பு போராட்டத்தை ஹிண்ட்ராப் வரேவேற்க்கிறது.

தேர்தல் சீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவான  உணர்வுகளை ஹிண்ட்ராப் வெளியிடும் அதேவேளையில், முன்னுதாரணமாக கொள்ளப்பட வேண்டிய இம்முயற்சியில் நாம் அசட்டையாக இருந்து விடவும் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றோம்.

PSC-யினரின்   பரிந்துரைகளின் மீது காட்டிய கவனமும், அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் BERSIH அமைப்பினரின் மறுமொழிகளும் தேர்தல் நடைமுறை செயல்முறைகளை பற்றியதாகவே அமைந்திருந்தன.

வாக்காளர் பட்டியலில் ஏற்படக்கூடிய தில்லுமுள்ளுகள் , குளறுபடிகளை சரிபார்த்து சமநிலைபடுத்தும் குறைந்த  சாத்தியங்கள், தேர்தல் ஆணைய கட்டமைப்பு மற்றும் அதன் செயல் பாடுகள் , தொலைதூர வாக்குகளை நிர்வகிக்கும் முறை போன்ற அம்சங்களே இவ்விவாதங்களின்  போது முக்கியத்துவும் பெற்றிருந்தன.

ஹிண்ட்ராப், தேர்தல் ஆணைய கட்டமைப்பு மற்றும் நடைமுறை செயல்முறைகளுக்கு அப்பாற்ப்பட்ட விழயங்களிலும் அக்கறை கொண்டுள்ளது. தாங்கள் அளிக்கும் வாக்குகளுக்கு தகுந்த “பலனளிப்பில்லாத அவலத்தை” (disenfranchised) மலேசிய ஏழை இந்தியர்கள் தற்போது அமலில் இருக்கும் தேர்தல் நடைமுறைகளால் எதிர்கொள்கிறார்கள். இது இந்நாட்டின் பிற சிறுபான்மை சமூகத்தினருக்கும்
பொருந்தும். “பலனளிப்பில்லாத அவலம்” என்ற இந்த அடிப்படை அநீதி நிகழ்வதற்கு காரணம் தேர்தல் அமைப்பை மையமாக கொண்டு , சிறுபான்மையினரின் உரிமைகளையும்   , நலன்களையும் பாதுகாக்க தவறிய  நமது ஆட்சி முறையே ஆகும். இதன் பலனாக  அரசாங்கமோ அதன்  கொள்கைகளோ  வெகு சௌரியமாக  சிறுபான்மையினரை பற்றி அதிக அக்கறை கொள்ளாமலிருக்க வழி அமைக்கிறது.  வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வேரூன்றி கிடக்கும் இனவாத பண்புநலன்களில் அக்கறை காட்டும் அரசியல் போக்கு மலேசியாவில்  மேலோங்கி நிற்கும் இன்றைய சூழ்நிலையில் சிறுபான்மையினரின் உணர்வுகள் மீது  பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் அக்கறை கொண்டு சேவையளிக்க வேண்டும் என்ற எத்தகைய உத்திரவாதமும் இல்லை.

எங்களின் இந்த கருத்தை  பலர் ஆமோதிப்பதில்லை அனால் அதே வேலையில் மலேசியாவில் உள்ள அணைத்து சிறுபான்மை இனத்தவரும் ஏன் சகலவிதமான சமூக பொருளாதார துறைகளிலும் பின் தங்கியவர்களாக இருகிறார்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் தகுந்த பதிலும் இருப்பதில்லை. வேறு சிலரோ சிறுபான்மையினருக்கு பிரதிநிதிகள்  இருகிறார்கள் , உதாரனத்திற்க்கு  இந்தியர்களை
பிரதிநிதித்து நாடுளுமன்றதில் எத்தனை உறுப்பினர்கள் இருகிறார்கள் பாருங்கள் என்பர். நிறைவான சிறுபான்மையினரின் “பிரதிநிதித்துவம்” என்பது பிரதிநிதிகளின் எண்ணிகையை கொண்டு முடிவுசெய்யப்படும் ஒன்றல்ல. மாறாக சிறபான்மை  பிரதிநிதி என்பவர் சிறுபான்மையினருக்கு எதிரான , பாதகமான திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக குரலெழுப்பி ஆற்றலுடன் செயல்படும் வல்லமையையும் , செல்வாக்கையும் பெற்றிருப்பதே  முறையான சிறுபான்மை “பிரதிநிதித்துவம்” ஆகும்.

எனவே, மலேசிய சிறுபான்மையினரின்  இந்த  “பலனளிப்பில்லாத அவலம்” தொடர்பில் ஹிண்ட்ராப் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. “BERSIH”  மேற்கொண்டுள்ள தற்போதைய தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளிலும் சிறுபான்மையினரின் பிரச்சனைகள்  தவிர்க்கப்பட்டு, அடையாளங் காணப்படவில்லை என்பதால்  சிறுபான்மையினரின்  சவால்கள் தொடரவே செய்யும் என்பது
ஹிண்ட்ராபின் வாதமாகும்.

BERSIH  போன்றதொரு சீர்திருத்த இயக்கம் இது போன்ற பலவீனங்களையும் கண்டறிந்து மேலும் சீரிய முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதின் வழி உறுதியான மாற்றங்களை கொண்டுவர முடியும். சீர்திருத்தம் என்பது  சிறந்த நடைமுறைகளை பற்றியதோடு மட்டுமல்லாமல் சிறப்பான அமைப்பு
முறைகளையும் கொண்டிருக்கேவேண்டும் என்பது ஹிண்ட்ராபின் எதிர்பார்ப்பாகும்.

ஒரு அரசியல் அமைப்பு என்பது முழுமையான மக்கள் ஆட்சியை பிரதிபலிக்க வேண்டுமானால் , சிறுபான்மையினரின் நியாக்குரலை எதிரொலிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு நியாயமான தீர்வுகளை அடையாளம் கண்டு செயல்படுத்திடும் முறைகளை உறுதி பட கொண்டிருக்க வேண்டியது  அவசியமாகும். இதுவே முழுமையான சீர்திருத்தமாகும்.

BERSIH  அமைப்பின் இந்த முயற்சிகளுக்கு ஹிண்ட்ராப் ஆதரவளிக்கும் அதேசமயத்தில் “பலனளிப்பில்லாத அவலம்” தொடர்பான விவகாரத்தில்   தீர்வு காண்பதிலும்  BERSIH அமைப்பு தீவிரம் காட்டும்   என்று
எதிர்பார்க்கிறோம்.

நன்றி

நா.கணேசன்
தேசிய ஆலோசகர்
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.

TAGS: