கம்பாரில் வெள்ளம் காரணமாக 400 பேர் வெளியேற்றப்பட்டனர்

சுங்கை கம்பார் ஆறு இன்று அதிகாலை கரை புரண்டு ஒடியதைத் தொடர்ந்து கம்பார் மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு மூன்று மீட்டர் உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்தது,.

அதனால் அந்தக் கிராமங்களச் சேர்ந்த 400 பேர் வெள்ளம் துயர் துடைப்பு நிலையத்திற்குக் கொண்டு  செல்லப்பட்டனர்.

Kampung Baru, Kampung Pasir, Kampung Kuala Dipang, Kampung Malaya ஆகியவற்றைச் சேர்ந்த அவர்கள் கம்பார் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக கம்பார் போலீஸ் தலைவர் சூப்பரிடெண்ட் அப்துல் அஜிஸ் சாலே கூறினார்.

நேற்று மாலை தொடக்கம் அந்தப் பகுதியில் கனத்த மழை பெய்து கொண்டிருந்ததால் கம்பார் ஆற்றின் கரைகள் உடைத்துக் கொண்டன. அதனால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. என்றாலும் உயிருடற்சேதம் ஏதுமில்லை என அவர் நிருபர்களிடம் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இடம் பெயரச் செய்வதற்கு தீயணைப்பு, மீட்புத் துறை, சிவில் தற்காப்புத் துறை, போலீஸ், சமூக நலத் துறை ஆகியவை ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் சொன்னார்.

பெர்னாமா