தமிழ் ஆர்வாலரும் நடிகருமான மணிவண்ணனுடன் சிறப்பு நேர்காணல்

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழ் ஆர்வாலரும் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

தான் அரசியல் அனுபவம் கொண்டவனல்ல என்றாலும் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் போரை அவதானித்துக் கொண்டுவருபவன் என்றவகையில் தான் இந்தக் கருத்தை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தனது இயலாத உடல் நிலையிலும் கூட தமிழகத்தில் இடம்பெற்ற தமிழீழ ஆதரவு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திரு. மணிவண்ணன், நாம் தமிழர் கட்சியின் நல்ல ஆலோசகராகவும் செயல்பட்டுவருகிறார்.

சினிமாவில் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேட அரசியலில் குதிக்கும் அரசியல் நடிகர் கூட்டத்தின் செயலுக்கு எதிர்மறையாக, ஈழத்தில் தனது உறவுகள் படும் கஷ்டங்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற வேட்கையில் தன்னை ஓர் விடுதலை போராட்டவாதியாக மாற்றிக்கொண்ட பெருமை மணிவண்ணன் அவர்களுக்கு உண்டு.

சுமார் 400-க்கும் மேல்பட்ட தமிழ்த்திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் தனது திறமையை வெளிப்படுத்திய இந்த திரைப்பட நடிகர் இன்று ஓர் நல்ல தமிழ் உணர்வாளராகவும் தமிழீழ உணர்வாளராகவும் செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் செம்பருத்தி இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலை வாசகர்கள் கீழே பார்வையிடலாம்.

TAGS: