பிரஞ்சு நீதிபதிகள் சுவாராம் சாட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்

மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம்  சமர்பித்த சாட்சிய அறிக்கை பாரிஸ் பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக அது அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை விசாரணை நீதிபதி Roger Le Loire முன்னிலையில் வைத்தது.

2002ம் ஆண்டு மலேசிய அரசாங்கத்துக்கு இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் விற்கப்பட்டதின் தொடர்பில் உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு  சட்டவிரோதமாக தரகுப் பணம் கொடுத்ததாக கூறப்படுவது மீது 2010ம் ஆண்டு சுவாராம் தற்காப்பு தளவாடங்களை தயாரிக்கும் பிரபல பிரஞ்சு டிசிஎன்எஸ் நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

சுவாராம் இயக்குநர் குவா கியா சூங், அதன் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல், வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி ஆகியோர் பாரிஸில் நேற்று நீதிபதி முன்னிலையில் வாதிட்டனர்.

சுவாராம் சார்பில் பிரஞ்சு வழக்குரைஞர்களான வில்லியம் போர்டனும் ஜோசப் பிரெஹாமும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வழக்கில் இரண்டு விசாரணை நீதிபதிகளில் ஒருவரான Le Loire முன்னிலையில் தனது வாதத்தை சமர்பிப்பதில் வெற்றி கண்டதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது கேப்ரியல் கூறினார்.

கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது விசாரணை ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் கொண்ட குழு அறிக்கையையும் நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

சாத்தியமான சாட்சிகள்  என சுவாராம் முன்மொழிந்த பட்டியலையும் நீதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றுவர்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஆகியோரும் அடங்குவர்.

நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த போது கையெழுத்தான 7.3 பில்லியன் ரிங்கிட் ஸ்கோர்ப்பியோன் விற்பனை ஒப்பந்தம் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவாராம் கொடுத்துள்ள புகாரை மறு உறுதி செய்யவும் நேற்றைய விசாரணை நிகழ்ந்ததாக கேப்ரியல் சொன்னார்.

“அந்த நீர்மூழ்கிகள் வாங்கப்பட்டதின் தொடர்பில் நாங்கள் கோரிய பதில்களை மலேசிய நாடாளுமன்றம் தருவதற்குத் தவறி விட்டதால் நாங்கள் அந்த வழக்கைச் சமர்பித்துள்ளோம்,” என்றும் அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.

“மங்கோலிய பிரஜையான அல்தான்துயா ஷார்பு கொலை தொடர்பிலும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் எங்கள் புகார்களை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தவறி விட்டது என்றும் நாங்கள் குறிப்பிட்டோம்.”

அந்த ஸ்கோர்ப்பியோன் ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு வகை செய்யும் பொருட்டு டிசிஎன்எஸ் கொடுத்த தரகுப் பணத்தில் குறிப்பிட்ட மலேசிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதைக் காட்டுவதற்குப் போதுமான ஆதாரங்களை பிரஞ்சுத் தரப்பு இது வரை வழங்கியுள்ளதாகவும் பிரெஹாம் சொன்னார்.

” ஸ்கோர்ப்பியோன் தரகுப் பணம் பற்றிய விவகாரம் மீது இப்போது நடைபெற்றுள்ள விசாரணை மிகப் பெரிய முன்னேற்றம்,” என்றும் அவர் வருணித்தார்.