‘ஆகவே தூய்மையான நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் “தேசிய நலன்” அல்ல’

மக்கள் சார்புடைய அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. அம்னோவுக்கு எதிராக போராட்டம் நடத்த அம்னோவிடமே அனுமதி கேட்பதற்கு அது ஒப்பாகும்.

பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கம் இல்லை என்கிறது டிபிகேஎல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்)

வெரித்தாஸ் எட் அகுவித்தாஸ்: அம்னோ (டிபிகேஎல் கிளை) அந்த முடிவைச் செய்ததில் யாராவது வியப்படைந்தார்களா ? மக்கள் அமைதியாக ஒன்று கூடுவதை மறுப்பதற்கு காரணம் இருக்கிறது என அது எண்ணுகிறதா ?

ஏப்ரல் 28 அனைவருக்கும் சிறந்த நாளாக திகழட்டும். மலேசியா நியாயமான நாடு என்பதை நாம் அன்று உலகிற்குக் காட்டுவோம்.

பிஎன் எப்போது ஆட்சியில் இருக்கும் என அந்த அம்னோ (டிபிகேஎல் கிளை) நினைக்கிறது.

அடையாளம் இல்லாதவன்#43051382: அந்த இடத்தை பெர்சே அறிவித்தது முதல் டிபிகேஎல் பதில் ‘இல்லை’ என்று தான் இருக்கும் இந்த மண்ணில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

என்ன நடந்தாலும் பேரணி நடைபெற வேண்டும். கோலாலம்பூர் பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் உள்ள 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10 அதன் வசம் உள்ளது. பக்காத்தான் சரி என்று சொல்லி விட்டதால் அந்த டிபிகேஎல் கூட்டாளிகளை அலட்சியம் செய்யுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக 13வது பொதுத் தேர்தலில் மலேசியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பெரும் எண்ணிக்கையில் மக்கள் வாக்களிக்கும் போது பிஎன் அமர்த்தியுள்ள ஆவி/சட்ட விரோத வாக்காளர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை முறியடித்து விடலாம்.

லிம் சொங் லியோங்: அம்னோ தனது கைப்பாவைகளை எல்லா இடத்திலும் அமர்த்தியுள்ளது. அதனால் அவர்கள் மக்கள் விருப்பத்துக்கு முரணாக எல்லா வழிகளிலும் செயல்படுவார்கள்.

டிப்கேஎல் முதல் புத்ராஜெயா வரையில் கேடிஎம் ரயில் நிலையங்கள் முதல் மெர்தேக்கா சதுக்கம் வரையில் போலீஸ் முதல் தேர்தல் ஆணையம் வரையில் எல்லா இடங்களிலும் அவர்கள் உள்ளனர்.

அனோன் 23: கோலாலம்பூர் மேயர் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 2008 தேர்தலில் கோலாலம்பூர் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்ததை அவர் உணரவில்லையா ?

அம்னோ நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் ஆட்டத்தை ஆடுகிறது. அந்த நிகழ்வுக்கு உள்துறை அமைச்சர் இணக்கம் தெரிவிக்கிறார் (அவருக்கு எவ்வளவு பெரிய மனது) போலீஸ் மௌனம் சாதிக்கிறது. காரணம் அந்தச் சதுக்கத்தைப் பயன்படுத்த டிபிகேஎல் அனுமதிக்காது என அதற்கு ஏற்கனவே தெரியும்.
 
அந்தச் சதுக்கம் தேசிய நிகழ்வுகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும். என்ன வேடிக்கை ! நியாயமான, தூய்மையான, சுதந்திரமான தேர்தல்களுக்கான மக்கள் பேரணியைக் காட்டிலும் பெரிய தேசிய நிகழ்வு எதுவும் இருக்க முடியாது.

அம்னோ ( மசீச, மஇகா பற்றி நான் சிந்திப்பதே இல்லை) தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்கு எதிரானது என எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அது தேர்தல் ஆணைய ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியலில் இதுகாறும் மோசடி செய்து வந்துள்ளது.

பத்தாங் காலியில்  இப்போது 40,000 வாக்காளர்கள் உள்ளனர். கிராமப்புறத் தொகுதியில் உள்ள அந்த சிறிய நகரத்திற்கு அந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். நம்பவும் முடியவில்லை. நஜிப் உண்மையில் விரக்தி அடைந்திருக்க வேண்டும்.

மலேசியா தோழன்: “தேசிய நிகழ்வுகள்” என்று டிபிகேஎல் சொல்லும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு நெஸ்லே தனது 100வது ஆண்டு நிறைவை அங்கு கொண்டாடியது. “அது தேசிய நிகழ்வா ?”

பிட்புல்: மக்கள் சார்புடைய அந்த நிகழ்வின் ஏற்பாடாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. அம்னோவுக்கு எதிராக போராட்டம் நடத்த அம்னோவிடமே அனுமதி கேட்பதற்கு அது ஒப்பாகும்.

அடையாளம் இல்லாதவன் #66797900: அனுமதிகளை மறந்து விடுங்கள். திட்டமிட்டபடி செயலாற்றுங்கள்.

பெண்டர்: மேயர் அவர்களே, பெர்சே விண்ணப்பத்தை நீங்கள் நிராகரித்து விட்டதால் அது பின்  வாங்கி விடும் என நீங்கள் உண்மையிலேயே எண்ணுகின்றீர்களா ?