இலண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுவரும் இவ்வேளையில் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு காணொளி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
2012 ஒலிம்பிக் போட்டிக்கு அனைத்துலகத்தை வரவேற்கும் அனைத்துலக மொழிகள் அடங்கிய அவ்வரவேற்பு காணொளியில் தமிழையும் அதன் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில் முதல் முதலில் “வணக்கம்” என தமிழில் ஒலிக்கின்றது. அதன் பின்னர் ஏனைய மொழிகளில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இன்னும் 100 நாட்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் வகையில் பல்வேறு வரவேற்பு நிகழ்வுகள் இலண்டனில் இடம்பெற்றுவருகிறது.
இலண்டன் ஒலிம்பிக் போட்டி வரவேற்பில் தமிழ் மொழி முதல்முதலில் இடம்பெற்றதானது பிரிட்டனில் வாழும் தமிழர்களை மட்டுமின்றி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக செம்பருத்தியிடம் கூறுகிறார் இலண்டனில் வாழும் தமிழ் உணர்வாளர் கந்தசாமி.
அனைத்துலக சமூகம் கடந்த சில காலங்களாக தமிழர்களின் கோரிக்கைகளுக்கு சற்று செவிசாய்க்கத் தொடங்கியுள்ளதுடன் தமிழர் வரலாற்றுக்கும் தமிழுக்கும் மதிப்பளித்து வருகிறது; இதற்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வருவதுதான் காரணம் என்கிறார் இலண்டன் வாழ் இலங்கைத் தமிழரான முருகையா.
காணொளி பார்வையிட இங்கே அழுத்தவும்