2010ம் ஆண்டு வெளியிட்ட “மலேசிய தான்தோன்றி: சிரமமான காலத்தில் மகாதீர் முகமட்” என்ற தமது புத்தகத்தின் மூலம் உள்துறை அமைச்சில் சிவப்புக் கொடிகளை உயர்த்திய பேரி வெயின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீர்திருத்தவாதி என்னும் தோற்றம் தேர்வு செய்யப்பட்ட ஒன்று என வருணித்துள்ளார்.
நஜிப்புக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவி அரசாங்கத்தின் நிலைக்கு ஆபத்து ஏர்படாத இடங்களில் மட்டுமே மாற்றங்களை அறிமுகம் செய்ததுடன் ஒப்பிடுகையில் நடப்புப் பிரதமர் தமது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கூடுதல் அர்த்தம் கொடுத்துள்ளதை பத்திரிக்கையாளரும் புத்தக ஆசிரியருமான பேரி வெயின் ஒப்புக் கொண்டார்.
“நஜிப் தமது தனிப்பட்ட அரசியல் வரம்புகளை புரிந்து கொண்டு வியூக அடிப்படையில் அல்லது தேர்வு அடிப்படையில் சீர்திருத்தவாதியாக மாறியுள்ளார். அவரைச் சந்தர்ப்பவாத சீர்திருத்தவாதி என வருணிப்பது பொருத்தமாக இருக்கும்,” என ஆஸ்திரேலியாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துள்ள அந்த ஆஸ்திரேலியர் கூறினார்.
சீர்திருத்தங்கள் அதிகம் தேவைப்படுகின்ற சில பகுதிகளில் மேலோட்டமாக செல்வதின் மூலம் சில கொள்கைகளின் விளிம்புகளில் போதுமான மாற்றங்களைச் செய்து அவற்றை கவர்ச்சியாக மாற்றி மலேசியாவுக்கு விற்பனை செய்து அம்னோவின் சரிவைத் தடுக்க முடியும் என நஜிப் நம்புகிறார்,” என வெயின் நேற்றிரவு கோலாலம்பூரில் மலேசிய அந்நிய நிருபர்கள் மன்றத்தின் 30 உறுப்பினர்களிடம் கூறினார்.