சிறந்த ஜனநாயகம் இப்போது சிறந்த வாக்காளர் பட்டியல்

‘இசி என்ற தேர்தல் ஆணையம் நாட்டுக்கு நல்லதை நோக்கி வேலை செய்யாமல் அம்னோவுக்கு எது நல்லதோ அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது’

இசி தலைவர்: எங்கள் வாக்காளர் பட்டியல் உலகில் மிகவும் தூய்மையானது

லின் வென் குவான்: அமெரிக்கா, பிரிட்டனைக் காட்டிலும் நமது கல்வி முறை சிறந்தது என மந்தமான நமது துணைப் பிரதமர் சொல்வது போல தேர்தல் ஆணையத் தலைவருடைய மங்கலான கண்ணாடி வழியாகப் பார்த்தால் உலகில் மிகவும் தூய்மையான வாக்காளர் பட்டியலை நாம் பெற்றுள்ளதாகத் தான் எண்ணத் தோன்றும்.

நாம் இது போன்ற கற்பனையான தலை சிறந்த மய்யங்களைப் பற்றி நாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆகாயக் கோட்டைகளைக் கட்டும் பட்டியலில் இசி-யும் இப்போது சேர்ந்துள்ளது.

நாம் உலகில் சிறந்த வாக்காளர் பட்டியலைப் பெற்றுள்ளோம் என்பதை மெய்பிக்க இசி உண்மையிலேயே சுதந்திரமாக இயங்கக் கூடிய புகழ் பெற்ற அனைத்துலக பார்வையாளர்களை அழைத்து அந்தப் பட்டியலை ஆராயச் சொல்ல வேண்டும்.

ஆனால் இன்றைய சூழலில் இசி தலைவர் என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் அம்னோ/பிஎன் சேவையில் இணைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

நசுக்கப்பட்டவன்: உலகிலேயே மிகவும் கறை படிந்த அமைப்புக்களில் இசி-யின் தோற்றம் அமைந்துள்ளது எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு தேர்தலிலும் அம்னோ வெற்றி பெற அது அம்னோவுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறது. அது அவ்வாறு செய்யும் போது சேர்ப்பது, நீக்குவது ஆகியவை உட்பட எல்லா வழிகளிலும் செயல்பட்டு மலேசிய மக்களை ஏமாற்றி வந்துள்ளது.

இசி-யின் நேர்மை, ஆற்றல், பாகுபாடு இல்லாத தன்மை ஆகியவை மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் இசி ஆணையர்கள் விலக வேண்டும் என விரும்புகிறோம். தங்கள் வேலையை தொழில் ரீதியாக செய்யும் மக்கள் அங்கு இருக்க வேண்டும்.

ஒய்வூன்: அன்புள்ள இசி தலைவர் அவர்களே, நீங்கள் எத்தனை நாடுகளின் வாக்காளர் பட்டியலை நீங்கள் சோதித்தீர்கள் ? ஒன்று, இரண்டு, 10, 20, 200 எதுவுமில்லையா ? அவற்றின் பெயர்களைக் கொடுங்கள்.

200 நாடுகளாவது இருக்க வேண்டும். அதனால் நீங்கள் இந்த முடிவுக்கு வர கடுமையாக உழைத்திருக்க வேண்டும். அல்லது வேடிக்கையாக சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்வது ஒரு வேளை சாத்தியமானதாக இருக்கக் கூடிய சாத்தியமும் உண்டு. கிணற்றுத் தவளைகள் என்பதைப் போல நீங்கள் ‘உலகம்’ என்ற சொல்லை மலேசியாவுக்குள் எனச் சுருக்கியிருக்க வேண்டும்.

ஹலோ: வாக்காளர்கள் குளறுபடிகள் தொடர்பில் பெயர்களும் சம்பவங்களும் கூட இசி-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கவனிக்கப்படவே இல்லை.

அவற்றை அலட்சியம் செய்து விட்டு உலகில் மிகவும் தூய்மையானதான வாக்காளர் பட்டியலை  நாம் பெற்றுள்ளதாக சொல்வதற்கு அவருக்கு நிறையத் துணிச்சல் இருக்கிறது.

அவற்றை ஆராயப் போவதில்லை என்றும் வாக்காளர் பட்டியலை மாற்றப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். அது உண்மையில் நாகரிகமற்ற காரியமாகும். பெர்சே 3.0 அவருக்கு  வெளியே போகும் பாதையைக் காட்ட வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு வாக்குகளுக்காக உலகில் வேறு எந்த நாடாவது குடியுரிமையை வழங்கியுள்ளதா ? வேறு எந்த நாட்டிலாவது தங்களது அடையாளக் கார்டுகளில் ஒரே முகவரியைக் கொண்டுள்ள கணவனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு தொகுதிகள் ஒதுக்கப்படுமா ?

வாக்காளர் பட்டியலில் 150 வயதான ஒருவர் எந்த நாட்டில் இடம் பெற்றிருக்கிறார் ? ஒரே முகவரியில் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர் இருப்பது வேறு எங்காவது உண்டா ?

கேஎஸ்என்: ஆம் அப்துல் அஜிஸ் அவர்களே அதே மாதிரி இவ்வாண்டுக்கு உலகில் தலை சிறந்த நகைச்சுவையாளரும் நீங்களே. சரி தானே ? நீங்கள் மலேசியர்களை என்னவென்று நினைத்துக் கொண்டீர்கள் ?

குவிக்னோபாண்ட்: கடந்த காலத்தில் நாம் இசி-யிடம் புகார் கொடுத்தோம். பேசினோம். மழை பெய்தாலும் வெயில் கொளுத்தினாலும் கலகத் தடுப்புப் போலீஸ் குவிக்கப்பட்டாலும் நாம் பெரும் எண்ணிக்கையில் வரும் சனிக்கிழமை ஒன்று கூடுவோம்.

நமது தேர்தல் நடைமுறைகள் கறை படிந்தவை என்பதை மலேசியர்களும் உலகின் மற்ற பகுதிகளும் அறியட்டும். நாம் நீதிக்கும் நேர்மைக்கும் போராடுவோம்.