வாக்காளர் பட்டியலில் பிரச்னைக்குரிய 3.3 மில்லியன் வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியலில் 3.3 மில்லியன் போலி வாக்காளர்கள் இருப்பதாக ஒர் ஆய்வாளரான ஒங் கியான் மிங் கூறிக் கொண்டுள்ளார்.

அதில் பெரும்பகுதி தங்கள் அடையாளக் கார்டுகளில் (மை கார்டுகள்) காட்டப்பட்டுள்ள முகவரிகளிலிருந்து வேறுபட்ட தொகுதிகளில் வாக்களிக்கும் மக்கள் ஆவர் என அவர் சொன்னார்.

பத்து ஆண்டுகள் பழமையான புள்ளி விவரம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒங் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 3.1 மில்லியன் வாக்காளர்கள் தங்களது மை கார்டு அட்டைகளில் உள்ள முகவரிகளுடன் ஒத்துப் போகாத தொகுதிகளில் வாக்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

அந்தத் தகவல் 2002ம் ஆண்டு தேசியப் பதிவுத் துறை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியது என்பதே கவலையைத் தரும் விஷயம்,” என ஒங் பெர்சே 2.0 ஏற்பாடு செய்த நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்காக பெர்சே 2.0 அமைப்பு போராடுகிறது.

அதே புள்ளி விவரம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமக்குக் கிடைத்தது என்றும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்ட இயக்குநருமான ஒங் குறிப்பிட்டார்.

என்றாலும் ஒரு வாரத்துக்குள்  தாம் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க முடிந்தததாக அவர் சொன்னார்.