எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 3.0 பேரணியில் தங்களுடைய ஊழியர்கள் கலந்துகொள்வதற்கு தடைவித்திக்கும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என ஹாங்கோங் பேங் (HSBC) கூறுகிறது.
தங்களுடைய வேலை நேரத்திற்குப் பின்னர் ஊழியர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்று அது கூறிற்று.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வலைப்பதிவர் ஸோரோ அன்மாஸ்க்ட் அப்பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் ஓர் உள்சுற்றறிக்கை வெளியிடப்பட்டதா என்று கேட்டிருந்தார்.
“எச்எஸ்பிசி செயல்படும் நாடுகள் மற்றும் இடங்கள் ஆகியவற்றில் அரசியலில் நடுநிலைமை வகிப்பதாகவும் அதன் அந்நிலைப்பாட்டிற்கு மாறாக அறிக்கை விடும் எந்த ஓர் ஊழியரையும் அது பொறுத்துக்கொள்ளாது”, என்று அவ்வங்கியின் அறிக்கை கூறுகிறது.