கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஆதரவாளர்களைக் கொண்டு செல்வதிலிருந்து சுற்றுலா பஸ் நிறுவனங்கள் விலகிக் கொண்ட போதிலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அந்த அமைப்பின் தலைவர் வோங் தாக் கூறுகிறார்.
“இது மிகச் சிறிய பிரச்னை, எது எப்படி இருந்தாலும் மக்கள் அங்கு செல்வர். குவாந்தான் வெகு வெகு தொலைவில் இல்லை,” என அவர் இன்று நிருபர்கள் கூட்டத்தில் கூறினார்.
குவாந்தான் கோலாலம்பூர் பயணத்திலிருந்து எட்டு சுற்றுலாப் பஸ்கள் விலகிக் கொண்டதாக அவர் கூறிக் கொண்டார். சுற்றுப் பயண அமைச்சு அந்தப் பஸ் நிறுவனங்களை அச்சுறுத்தியுள்ளது என வோங் குற்றம் சாட்டினார்.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டை அமைச்சின் தலைமைச் செயலாளர் ஒங் ஹோங் பெங் மறுத்துள்ளார். அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் அமைச்சுக்கு இல்லை என்றும் அவர் சொன்னார்.