சுதேசிகளின் அழுகுரல்: இறைவனே, எங்களைத் தவிக்க விட்டு விட்டீர்களே?

“நீதிமன்றங்கள் விருப்பு வெறுப்பின்றி ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது தானே நியாயம்?’

 

 

 

 

 

சுதேசி பாரம்பரிய உரிமை நிலம் மீதான வழக்கில் சரவாக் சுதேசிகள் தோல்வி

பேஸ்: நீதி நியாயமாக இருப்பதுடன் நேர்மையானது என்றும் கருதப்பட வேண்டும். இழப்பீடுகள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது?  பழக்கமற்ற சூழ்நிலைகளில் அவர்கள் புதிதாக எல்லாவற்றையும் சேர்க்க வேண்டுமா?

அந்த மக்களுடைய வாழ்க்கை நிலை உயருவதற்கு அவர்களுக்கு பாக்குன் அணை தேவையா? அங்கு அந்த அணை கட்டப்படாவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காதா?

இதற்கு பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மாநிலத்தை நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் பெரிய பெரிய செல்வந்தர்கள் மென்மேலும் பணம் பண்ணுவதற்கு மட்டுமே அந்த அணை தேவைப்படுகிறது.

அகராதி: அந்த பாக்குன் அணையும் மற்ற 12 அணைகளும் சரவாக்கிற்கும் அதன் எதிர்காலத் தலைமுறையினருக்கும் சாபக்கேடுகள்.

நாம் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்து இரண்டு கட்சி ஆட்சி முறையை அமைத்தால் மட்டுமே நாம் பொதுச் சேவையைக் காப்பாற்ற முடியும். நீதித் துறை சுதந்திரத்தை நிலை நிறுத்த முடியும். பாக்குனிலும் மற்ற கிராமப்புற சமூகங்களிலும் தங்களது நிலத்தை இழந்து விட்ட, ஏழ்மை நிலையில் உள்ள, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு கௌரவத்தை மீட்டுத் தர முடியும்.

நீதிபதி ஸாக்கி அஸ்மி அவர்களே, உங்களை மக்கள் எப்போதும் விசுவாசமான அம்னோ ஊழியராக என்றென்றும் நினைவில் வைத்திருப்பர். பணம் கௌரவத்தை கொண்டு வராது.

டாக்ஸ்: மலேசியாவில் சேராது இருந்தால் சரவாக்கில் உள்ள சுதேசிகள் இன்னும் நல்ல நிலையில் இருந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று நீதித் துறை அவர்களுடைய நிலத்தை அபகரித்துக் கொண்டு விட்டது.

பல தசாப்தங்களாக அம்னோவும் பிஎன்-னும் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அடையாளத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அவை சரவாக்கின் செல்வத்தை பலப் பல ஆண்டுகளாகத் திருடிக் கொண்டிருக்கின்றன. அடுத்து என்ன?

லின்: உண்மையான பூமிபுத்ராக்களுக்கு சொந்தமான நிலம் என வரும் போது மட்டும் நீதிமன்றங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்கின்றன.

ஆனால் ‘இந்தோனிசிய பூமிபுத்ராக்களுக்கு’ (மலாய் பூமிபுத்ராக்கள்- அவர்களுடைய தாத்தா அல்லது தந்தை இந்தோனிசியாவிலிருந்து வந்தவர்கள். அதனால் இந்த நிலத்தின் அசல் குடிகள் அல்ல) சொந்தமாக இருக்கும் மலாய் ஒதுக்கீட்டு நிலம் பற்றி சவால் விடுக்க யாருக்கும் நீதிமன்றங்களுக்குக் கூடத் துணிச்சல் இல்லை.

வெறுப்படைந்தவன்: சில ரிங்கிட்டுக்கு தங்கள் வாக்குகளை மலிவாக விற்ற சரவாக்கியர்களுக்கு கிடைக்கும் வெகுமதி இதுதான். அவர்கள் விழித்துக் கொண்டு 13வது பொதுத் தேர்தலில் பிஎன்-னை விரட்டுவது நல்லது.

இல்லை என்றால் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக அம்னோ-பிஎன் மற்றும் அதன் கைப்பாவைகளான வெள்ளை ராஜாக்களின் காலனித்துவ ஆட்சியில்தான் வாழ வேண்டும்.

கேகன்: ஆம் நீங்கள் உங்கள் வாக்குகளை 200 ரிங்கிட்டுக்கு அந்த பிசாசுவிடம் விற்பனை செய்தீர்கள். அடுத்து அந்தப் பேய் 200 ரிங்கிட்டுக்காக உங்கள் பாரம்பரிய நிலத்தை எடுத்துக் கொள்கிறது. சரவாக் சுதேசிகள் எப்போதுதான் பாடம் கற்றுக் கொள்வார்கள்?

நல்ல மனிதர்கள்: தங்கள் அறியாமையாலும் துயரங்களினாலும் ஏழ்மையில் வாடும் சுதேசி மக்கள் பிஎன் -னுக்கு வாக்களித்ததற்காக நீங்கள் அவர்களுக்கு சாபம் போடுகின்றீர்கள். ஆகவே நீங்கள் பிஎன் -னைக் காட்டிலும் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்களும் அவர்களை மட்டமாகத்தான் பார்க்கின்றீர்கள்.

மேற்கு மலேசியாவிலும் பலர் பிஎன் -னுக்கு வாக்களிக்கின்றனர். நீங்கள் ஏன் அவர்களுக்கு சாபம் போடவில்லை? நீங்கள் அதற்கு மாறாக அந்த மக்களுக்கு எந்த அளவு உதவி செய்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் தீர்வில் ஒர் அங்கமாக இல்லை என்றாலும் பிரச்னையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டாம்.

டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ்: சுதேசிகளின் அழுகுரல்: இறைவனே, இறைவனே, எங்களைத் தவிக்க விட்டு விட்டீர்களே? பதில்: இல்லை. சற்றுப் பொறுமையாக இருங்கள். நான் சீற்றம் கொண்டு அவர்கள் மீது பொங்கி எழுவதைப் பாருங்கள்.