குதப்புணர்ச்சி II வழக்கில் அன்வார் இப்ராகிம்மை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களுக்கு பேட்டி அளிப்பதற்காக பிரதமர் நஜிப்பும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் ஜாலான் டூத்தா நீதிமன்ற கட்டடத்திற்கு வந்தனர்.
பிற்பகல் மணி 2.55 க்கு அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.
மலாக்கா முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட் யுசுப்பும் பேட்டி அளிப்பதற்காக அங்கு இருந்தார்.
பேட்டியை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கர்பால் சிங், சங்கரா நாயர் மற்றும் பரம் குமாரசாமி நடத்தினர்.
நஜிப் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அவரும் ரோஸ்மாவும் புகார்தார் முகமட் சைபுல் புகாரி அஸ்லானை அவர்களுடைய அதிகாரப்பூர்வமான இல்லத்தில் சந்தித்தது குறித்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும்.
குதப்புணர்ச்சி சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் சைபுல்லை சந்தித்துள்ளனர்.
நஜிப் மற்றும் ரோஸ்மாவுடன் பேட்டி நடந்தபோது நீதிமன்ற கட்டடத்தில் காணப்பட்ட அன்வாரும் உடனிருந்தார்.
நஜிப்பும் ரோஸ்மாவும் அங்கு வந்திருப்பதை கண்டு செய்தியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இவ்விசயம் அவர்களுக்கு முன்னதாக தெரியவில்லை.