சிரியாவில் இராணுவத்தினருக்கும் கிளார்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கிச்சண்டை மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஐ.நா. அமைதிக்குழு முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் நேற்று இராணுவத்தினரும், கிளர்ச்சியாளர்களும் முர்டார் நகரில் மோதிக்கொண்டனர் இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 10 அப்பாவி மக்கள் 12 ராணுவத்தினர் , 4 பேர் கிளர்ச்சியாளர்கள் என 26 பேர் கொல்லப்பட்டனர்.