இன்று டாக்டர் கார்ல் வடிவேலு அவர்களின் ஆங்கில பொது சொற்பொழிவு!

காலனித்துவ மலாயாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட இன பிரிவினைவாத கொள்கையும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் பொது சொற்பொழிவு எதிர்வரும் 06.05.2012-இல் தலைநகர், விஸ்மா துன் சம்பந்தன் சோமா அரங்கில் நடைபெற உள்ளது.

சொற்பொழிவாளர் டாக்டர் கார்ல் வடிவேலு அவர்கள் முன்னாள் தூதராவார். கல்வியாளரான இவர் தமது சொற்பொழிவில் மலாயாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட இன பிரிவினை மூலத்தினைப் பற்றி உரையாற்ற உள்ளார்.

ஆங்கிலேயரின் ‘ இன ரீதியான’ கோட்பாடு காலனித்துவ இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகும். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மலாயாவில் இனங்கள் உருவாக்கப்பட்ட விதம் அவர்களது பொருளாதார கட்டமைப்பு மற்றும் அவர்களின் இன ரீதியான பிரிவினை கொள்கையை பற்றியும் டாக்டர் அவர்கள் விளக்கவுள்ளார்கள்.

டாக்டர் கார்ல் வடிவேலு அவர்களின் வரலாறு மற்றும் சமய உரைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். அவர் அரசியல், வரலாறு, சமயம் தொடர்பான பல ஆய்வு புத்தகங்களை எழுதியுள்ளார். தற்பொழுது மலேசிய இந்தியர்களின் வரலாறு தொடர்பான புத்தகத்தை எழுதி முடித்துள்ளார்.

 

ஏற்பாடு :   SEMPARUTHI.COM ( செம்பருத்தி இணையத்தளம்). நுழைவு இலவசம்.
Date:   6 May 2012 (Sunday)
Time: 10am to 12pm
Venue: Tan Sri Soma Hall
Wisma Tun Sambanthan
Jalan Sultan Sulaiman
Kuala Lumpur.

                தொடர்புக்கு: இளந்தமிழ் 012 3143910