செய்தியாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்த வேண்டும், சார்ல்ஸ்

மலேசிய ஊடகப் பணியாளர்களுக்கு  வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது பெர்னாமா டிவி ஒளிப்பதிவாளர் நோராம் பைசூல்  முகமதின் மரணம் மூலம் மிக தெளிவாக தெரிகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

அண்மையில் ஆப்பிரிக்க அமைதிகாப்பு படை மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபருக்கும் இடையில் நடந்த சண்டையில், குறி தவறிய துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகி நோராம் பைசூல்  உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம், அவர் புத்ரா1  மலேசியா மன்றம் ஏற்பாடு செய்திருந்த சோமாலியா நாட்டு மக்களுக்கு மனிதாபிமான பணிகளின் தகவல்களை சேகரிக்கும் சக பத்திரிக்கையாளர்களிடம் ஒரே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் நடைபெற்றது.இங்கும் எழும் கேள்வியே, இந்த  நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள்  கவச வாகனங்கள், குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் தலைக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் சென்றனரா இல்லையா என்பதுதான்.

எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பின் தகவல் படி, சொமாலியா  ஊடக பணியாளர்களுக்கு ஒரு பயங்கரமான இடமாகும் எனவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம்   23 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

போர் மற்றும் பஞ்சம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு சொமாலியா கடந்த 20 ஆண்டுகளில் ஒரு செயல்படும் அரசாங்கம் எதனையும் கொண்டிருக்கவில்லை.

உள்ளூர் ஊடக அமைப்புக்களுக்குக்கூட சொமாலியா  பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் பற்றி தெளிவாக தெரியும். ஒரு பிரபலமான கனடிய தனிச்சை  பத்திரிகையாளர், அமண்டா லிந்தௌட், ஆகஸ்ட் 23, 2008 அன்று துப்பாக்கி ஏந்திய நபரால் கடத்த பட்டு, 15 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப் பட்டார்.சோமாலியா பத்திரிகையாளர்கள் எதிர்க்கொள்ளும்  ஆபத்துக்களை அறிந்திருந்த போதிலும், மலேசிய அணி போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை இன்றி அனுப்பப்பட்டது  என்பது அதிர்ச்சி அளிக்கும் விசயமே என சார்லஸ் கூறனார்.
எனவே, பத்திரிக்கையளர்களை இம்மாதிரியான ஆபத்து சூழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன் மலேசிய ஊடக அமைப்புக்கள் முறையான பயிற்சிகளைத்  தங்கள் ஊழியர்களுக்கு  வழங்க வேண்டும்.  இது மேலும் தாமதம் இல்லாமல் உடனே செயல் படுத்தப்பட வேண்டும். ஊடக அமைப்புக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன்  செயல் படுவதை தகவல் அமைச்சு உறுதிப் படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்ர்.
“நான் நோராம் பைசூலின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில்  டிவி 3 நிருபர் அஜி சரேகர்  மஸ்லான் அவரது காயங்களிலிருந்து மிக விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”, என்றார் சார்ல்ஸ்

TAGS: