இணைய குடிமக்கள் ‘தேடப்படும்’ போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்

பெர்சே 3.0 பேரணியின் போது வன்முறையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் மீது போலீஸ் படை நடவடிக்கை எடுக்காததால் வெறுப்படைந்துள்ள இணைய குடிமக்கள் பத்திரிக்கை படப் பிடிப்பாளர் ஒருவரை தாக்குவதாக சொல்லப்படுகின்றவர்களை அடையாளம் காணும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

சீன மொழி நாளேடான குவான் மிங் டெய்லியின் படப் பிடிப்பாளரான ஹுவான் ஆன் ஜியானை தாக்கியதாகசொல்லப்பட்டும் நான்கு போலீஸ்காரர்களின் படங்கள் சீன மொழி முக நூல் ரசிகர்கள் பக்கத்தில் “நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் பிகேஆர்<டிஏபி>” என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

“பழி வாங்குவதற்கான நேரம் ! இதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ! குவாங் மிங் டெய்லி நிருபரை தாக்கிய நான்கு போலீஸ்காரர்கள் !” என அந்தப் பதிவில் எழுதப்பட்டுள்ளது.

அது வெளியான 24 மணி நேரத்தில் 3,000 பேர் அதனை ‘விரும்புவதாக’ தெரிவித்துள்ளனர். 200 பேர் கருத்துக் கூறியுள்ளனர். அதனை 6,000க்கும் முக நூல் பயனாளிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நிகழ்ந்த பேரணியின் போது போலீஸ்காரர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் சம்பந்தப்பட்ட வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளும் 91 ஆர்ப்பாட்டக்காரர்களின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “போலீஸ் தடுப்பு ஒன்றுக்குள் நுழைவதை’ மற்ற படங்கள் காட்டின.

பேரணியில் குறைந்தது 13 பத்திரிக்கையாளர்களும் படப்பிடிப்பாளர்களும் வீடியோ படப் பிடிப்பாளர்களும் தாக்கப்பட்டனர். தாங்கள் ஊடக ஊழியர்கள் என்பதற்கான அடையாளங்களைக் காட்டியும் போலீஸ்காரர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்களில் பலர் கூறிக் கொண்டனர்.

போலீஸ் முரட்டுத்தனம் எனக் கூறப்படும் சம்பவங்களைக் காட்டும் பல படங்களும் வீடியோ பதிவுகளும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் போலீசார் அத்தகைய சம்பவம் ஒன்றின் படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர். அந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்டவர்களும் அதனை நேரில் பார்த்தவர்களும் தங்களுடன் தொடர்பு கொள்ள் வேண்டும் என்றும் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்றத் தாழ்வாக விசாரணைகளை நடத்துவதாகவும் தவறு செய்த போலீஸ்காரர்களைப் பாதுகாப்பதாகவும் இணையக் குடிமக்கள் போலீசாரைக் குறை கூறியுள்ளனர்.