அரசாங்கம் தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை மீட்டுக் கொள்கிறது

அரசாங்கம் ‘நிறைய எதிர்ப்புக்கள்’ ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை நாளை தேவான் நெகாராவிலிருந்து மீட்டுக் கொள்ளும்.

அரசாங்கம், எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புக்கள் பங்கு கொண்ட 10 நிமிடக் கூட்டத்தில் அந்தத் திருத்த மசோதாவைக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சொன்னார்.

அந்த மசோதாவுக்கான மேலும் இரண்டு திருத்தங்களை தேவான் நெகாரா நாடிய வேளையில் முதலில் அந்த முடிவு அமைச்சரவை நிலையில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மூன்று திருத்தங்களுடன் அந்த மசோதாவை கடந்த மாதம் தேவான் ராக்யாட் ஏற்றுக் கொண்டது.

“தேவான் நெகாரா அந்த மசோதாவுக்கு செய்துள்ள திருத்தங்கள் மீண்டும் தேவான் ராக்யாட்டுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆகவே அதனை மீட்டுக் கொள்வதே சரியான சிறந்த வழி,” என்றார் அவர்.

தூய்மையான நியாயமான தேர்தல்களைக் கோரி கண்ணீர் புகைக் குண்டுகளையும் இரசாயனம் கலந்த நீரையும் பொருட்படுத்தாமல் 100,000 பேர் பெர்சே 3.0 பேரணியில் கலந்து கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தத் திருத்தங்கள் மீது யோசனை தெரிவித்த இசி-க்கு மசோதா மீட்டுக் கொள்ளப்படுவது அதன் முகத்தில் விழுந்த அறைக்கு ஒப்பாகும் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் உடனடியாகக் கருத்துத் தெரிவித்தார்.

“தேவான் நெகாரா தலைவர் தலைமையில் நாங்கள் எங்கள் கூட்டத்தை நடத்தினோம். அதில் நிருபர்களைச் சந்திப்பதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் நஸ்ரியும் லிம்-மும் கலந்து கொண்டார்கள்.”

“நாங்கள் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசனை செய்தோம். இறுதியில் அந்த மசோதவைக் கைவிடுவது என நாங்கள் முடிவு செய்தோம்,” என அப்துல் அஜிஸ் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.