நுருல் இஸ்ஸாவின் முதலாவது podcast ஒலிபரப்பு

மிடில் மலேசியா என்னும் podcast ஒலிபரப்பு தனது 11வது நிகழ்ச்சியில் ஊடக ஆலோசகரான ஊன் இயோ, லெம்பா பந்தாய் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வாருடன் உரையாடினார்.

நுருல் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதால் அடுத்த பொதுத் தேர்தலில் பெரும் தடையை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

அவரை எதிர்த்து வலுவான பிரச்சார எந்திரத்தையும் பண, ஊடக வலிமையையும் கொண்ட அம்னோ அமைச்சர் ஒருவர் நிறுத்தப்படும் சாத்தியமும் உண்டு. 

தேர்தல் மோசடி பற்றிப் பேசிய நுருல், 13வது பொதுத் தேர்தல் வரலாறு காணாத அளவுக்கு கறை படிந்ததாக இருக்கும் எனக் கூறினார். அதனால்தான் பெர்சே இயக்கம் மிகவும் முக்கியமானதாகும்.

பெர்சே 3.0 பேரணியின் போது பெர்சே 3.0 கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா உரை நிகழ்த்திய போது இருந்த வாகனத்தில்தான் நுருலும் இருந்தார். அந்த நிகழ்வில் நுருல் தாமை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாததால் அவரை யாரும் பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை அந்த podcast ஒலிபரப்பில் நுருல் விளக்கினார்.

அவர் சர்ச்சைக்குரிய சில கடுமையான விஷயங்கள் பற்றியும் அந்த ஒலிபரப்பில் பேசியுள்ளார். மக்கள் தடைகளை மீறுவது தவறா என்ற விஷயமும் தடைகளை மீறுமாறு தமது தந்தையான எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டாரா என்ற விஷயமும் அவற்றுள் அடங்கும்.

மற்ற பலரைப் போல நுருலும் தேர்தல் ஜுன் மாதம் நிகழும் என எதிர்பார்க்கிறார். அடித்தளத்தில் நல்ல ஆதரவு இருப்பதாக அவர் உணர்ந்தாலும் தேர்தல் போட்டியில் ஆட்டக்களம் சமமாக இல்லை என்பதையும் அவர் முழுமையாக உணர்ந்துள்ளார்.

என்றாலும் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதற்கான காரணங்களையும் அவர் தமது podcast ஒலிபரப்பில் விளக்கியுள்ளார்.

 Listen to Nurul Izzah in this 12-minute podcast.