பினாங்கிற்கு தீர்வையற்ற துறைமுகத் தகுதியை மீண்டும் வழங்கும் யோசனையை முதலமைச்சர் லிம் குவான் எங் கடத்திச் சென்று அதனை பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தின் சாதனை எனக் கூறிக் கொள்ளக் கூடும் எனக் கருதுவதால் பிஎன் அந்த யோசனைக்கு புத்துயிரூட்டத் தயங்குகிறதா?
அந்தக் கேள்வியை நிருபர்கள் எழுப்பிய போது, பினாங்கை மேம்படுத்துவது தொடர்பான யோசனைகளை வழங்குவதில் பக்காத்தானுடன் பிஎன் கூட்டணி போட்டியிடவில்லை என மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் பதில் அளித்தார்.
தீர்வையற்ற துறைமுகத் தகுதி பற்றி முதலில் தெங் குறிப்பிட்ட போது 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அந்தத் தகுதி மீண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என மாநில அரசாங்கமும் புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங்-கும் வேண்டுகோள் விடுத்தனர்.
தீர்வையற்ற துறைமுகத் திட்டம் தொடர்ந்து ஒரு யோசனையாகவே இருக்கும். கூட்டரசு அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டால் பினாங்கை பிஎன் கூட்டணி கைப்பற்றினால் மட்டுமே அது அமலாக்கப்படும் என தெங் சொன்னார்.
அந்த யோசனை பற்றிய அறிவிப்பு மாநில பிஎன் தலைவராக தாம் நியமிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது தற்செயலாக நிகழ்ந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டர்.
“லிம் விரும்பியிருந்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதனைச் சொல்லியிருக்க வேண்டும். இப்போது அல்ல. யோசனைகளுக்கு போட்டியிடுவதற்கு என்ன அவசரம் ?” என தெங் பதில் அளித்தார்.
அவர் நேற்று பினாங்கில் மாநில பிஎன் கூட்டத்துக்கு முதன் முறையாக தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
“நான் பினாங்கிற்கு முழுமையான திட்டத்தை தயாரித்துள்ளேன். தீர்வையற்ற துறைமுகம் அதில் ஒரு பகுதி ஆகும். அது மாநிலத்தை சுற்றுப்பயணிகளுக்கான சொர்க்கபுரியாக மாற்றும்.”