உங்கள் கருத்து: “இந்தத் தகவல்-அன்வாரை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் அம்னோ தடுமாறுகிறது என மக்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உறுதி செய்கிறது.”
அன்வார், அஸ்மின் மீது பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்படும்
பீரங்கி: பெர்சே 3.0ஐ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு இன்னும் பணியைத் தொடங்கவில்லை. ஆனால் இந்த ஆட்சி, பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது.
பெர்சே 3.0 அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் மேற்கொண்ட புரட்சி முயற்சி என ஏற்கனவே முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஒருவர் பழி சுமத்தியுள்ளார்.
கம்யூனிஸ்ட்கள் பின்னணியில் இயங்குவதாக இன்னொரு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஒருவர் கூறினார். ஆனால் பின்னர் அவர் தமது கூற்றை மாற்றிக் கொண்டு அதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் உண்மையில் கம்யூனிஸ்ட்கள் இல்லை என்றும் மார்க்ஸிஸ்ட் வழிகளைப் பின்பற்றும் கம்யூனிஸ்ட்களைப் போன்றவர்கள் என்றும் கூறினார்.
பொது மக்கள் குழப்பம் அடைந்துள்ளதோடு மட்டுமின்றி வியப்பும் அடைந்துள்ளனர். அதில் எந்தக் கூற்று சரி ?
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனைப் பொறுத்த வரையில் “எல்லாம் தயார் இலக்கை சுடுங்கள்” என்பதாகும். எல்லாம் முடியும் இந்த நாட்டில் (Bolehland) அவர் தமது கோமாளித்தனங்கள் மூலம் மக்களை மகிழ்ச்சிப்படுத்த அவர் தவறுவதே இல்லை.
13வது பொதுத் தேர்தலில் தமது சித்தி மகன் தோல்வியைத் தழுவுவதற்கு அவர் உதவி செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை.
மோசமான பெங் சூய்: இந்தத் தகவல்-அன்வாரை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் அம்னோ தடுமாறுகிறது என மக்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உறுதி செய்கிறது.
அடையாளம் இல்லாதவன்_3e21: அன்வாரை சமாளிக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரைக் கண்டு நீங்கள் எவ்வளவு அச்சப்படுகின்றீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் அதனை விட நன்றாகச் செய்ய முடியும். குதப்புணர்ச்சி, செக்ஸ், இப்போது இது.
பல முக்கியமான நெருக்கடியான பிரச்னைகள் கவனிக்கப்படாமல் இருக்கும் வேளையில் நீங்கள் அன்வாரை வீழ்த்தும் பணிகளில்தான் மும்முரம் காட்டுகின்றீர்கள். அதனால் மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.
அன்வாரை ஜெயிலுக்குள் அடைத்து விட்டால் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிக்க மக்களுக்குத் துணிச்சல் இருக்காது என நீங்கள் நினைக்கின்றீர்களா ?
அம்னோவையும் பக்காத்தானையும் ஒப்பீடு செய்து பாருங்கள். உங்களுக்கு வேறுபாடுகள் தெளிவாகத் தெரியும்.
பக்காத்தான் எவ்வளவு தான் பலவீனமாக இருந்தாலும் அதற்கு ஒரு தவணைக் காலத்துக்காவது வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என மக்களாகிய நாங்கள் எண்ணுகிறோம். அன்வார் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல.
ஹாங் துவா பிஜே: தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம். அவர்கள் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டி குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அந்த இருவரையும் தகுதியிழக்கச் செய்து விடுவர்.
அனல்: அது விரக்தி அடைந்த நிலையில் எடுக்கப்பட்ட அபத்தமான முயற்சி ஆகும். அம்னோ அதிகமான வாக்குகளை இழக்கப் போகிறது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே உலை வைத்துக் கொண்டதால் இப்போது தடுமாறுகின்றனர். ஆகவே அதனால் ஏற்பட்ட வலியை மறப்பதற்கு தங்கள் தலையில் சுட்டுக் கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மலேசியாவில் பிறந்தவன்: உண்மையாகவா ? எல்லாம் நிகழ்ந்ததற்குப் பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு கவைக்கு உதவாத காரணத்தை அவர்கள் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இது மக்களைக் கவரும் வழி அல்ல. அது யாரையும் மிரட்டவும் முடியாது. அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்கள் அரைக்கால சிலுவார் அணிந்துள்ள 10 வயதுச் சிறுவர்கள் அல்ல.
கண்ணீர் புகைக் குண்டுகளும் இரசாயனம் கலந்த நீரும் பாய்ச்சப்படும் என தெரிந்தே பெரும்பாலான மக்கள் அதில் பங்கு கொண்டார்கள்.
இத்தகைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அறிவுரை கூறிய சாணக்கியர் நிச்சயம் முட்டாள் ஆவார். ஏனெனில் களத்தில் காணப்படும் உண்மை நிலயை அவர் அறியவில்லை.
அடையாளம் இல்லாதவன் #43051382: இப்போது கையை உயர்த்தினால் கூட நீங்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம். இது உண்மையில் கேலிச் சித்திரப் பாத்திரங்கள் நிறைந்த வேடிக்கையான ஒரே மலேசியாவாகும்.