பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டை பெர்சே எதிர்ப்புக் குழுக்களும் மோட்டார் சைக்கிளோட்டிகள் குழு ஒன்றும் சூழ்ந்து கொண்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பேர் ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தியதற்காக பெர்சே-க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்களுக்கு வணிகரான ஜமால் முகமட் யூனுஸ் தலைமை தாங்குகிறார். அவர் பெர்சே பேரணியால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களை பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்கிறார்.
மொத்தம் 20 வணிகர்கள் அங்கு காணப்பட்டனர். அந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான, தங்களை Halau 1.0 என அழைத்துக் கொண்ட இளைஞர்களும் அங்கு தென்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த இடத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
அந்த மூன்று குழுக்களும் அம்பிகாவின் வீடு அமைந்துள்ள ஜாலான் செத்தியாகாசே 1-லிருந்து சற்று தொலைவில் உள்ள ஜாலான் செத்தியாகாசே 3ல் டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அமைத்துள்ள சாலைத் தடுப்பில் இணைந்தன.
அம்பிகா வீட்டுக்கு முன்னால் சந்தைக் கடைகளை அமைப்பதற்கு தான் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை ஜமால் குழு மீட்டுக் கொண்டுள்ளது.
PHOTO GALLERY (படத் தொகுப்பு)