உங்கள் கருத்து: “அடுத்த பொதுத் தேர்தலில் குண்டர்தனத்துக்கு முடிவு கட்டுவோம். வாக்குப் பெட்டிகளில் மிதவாதமும் நாகரீகப் பண்புகளும் தழைக்கட்டும்.”
அன்வார் செராமா மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன
கைரோஸ்: எதிர்க்கட்சி செராமாக்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் ஆபத்தான போக்கை உணர்த்துகின்றன. இதனைத் தொடக்கக் கட்டத்திலேயே கிள்ளி எறியா விட்டால் ஒவ்வொரு செராமாவிலும் அது பக்காத்தான் ராக்யாட்டாக இருந்தாலும் சரி பாரிசான் நேசனலாக இருந்தாலும் சரி குழப்பமே மிஞ்சும்.
அத்தகைய வன்முறைகள் மீது அரசாங்கம் இதுகாறும் மௌனம் காத்து வருகிறது. அது மிகவும் கவலை அளிக்கிறது. அரசாங்கம் அத்தகைய நாகரீகமற்ற நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது அல்லது அதற்குப் பின்னணியில் இருக்கிறது என்ற எண்ணத்தை அது தோற்றுவிக்கிறது.
பெர்ட்: நாளுக்கு நாள் பக்காத்தான் செராமாக்கள் மீது குண்டர் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நாட்டுக்கு என்ன நேர்ந்தது ?
பிரதமர் நஜிப் ரசாக், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) ஆகியோர் இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் ?
அந்த வன்முறைகளை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா ? பிஎன் செராமா ஒன்றில் இது நடந்திருந்தால் தாக்குதலை நடத்தியவர்கள் அப்போதே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பர். ஏன் இந்த இரட்டை வேடம் ?
ஹங் பாப்யூப்: இது அண்மைய காலமாக நடக்கும் நிகழ்வும் அல்ல. டாக்டர் மகாதீர் முகமட் காலத்திலிருந்து தொடரும் நிகழ்வும் அல்ல.
கிளந்தானில் 1969ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது இது போன்று ‘மழை’ பொழிந்துள்ளது.
அங்கும் முட்டைகளும் கற்களும் விழுந்தன.
அதிகார வர்க்கம் அங்கீகாரத்துடன் அம்னோ இளைஞர்கள் இருட்டிலிருந்து கொண்டு பாஸ் கூட்டங்களை நோக்கி வீசும் அத்தகைய ‘ஏவுகணைகளிலிருந்து’ என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் தலைக்கவசத்தை அணிந்து சென்றிருக்கிறேன்.
“அதிகாரிகள் அவர்களைப் பாதுகாப்பதே” இதில் முக்கியமான விஷயமாகும்.
அத்தகைய வன்முறைகள் அதிகாரத்துவ அனுமதியுடன் அரங்கேறுவது அம்னோவின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அம்னோ விரக்தி அடைந்த நிலையில் இவ்வாறு செய்கிறது.
அடையாளம் இல்லாதவன்#40538199: இன, சமய அடிப்படையில் அவர்கள் மக்களைப் பிரிப்பதில் தோல்வி கண்டு விட்டனர். அதனால் மக்களை அடி பணிய வைக்க மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
குண்டர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் அமைப்புக்களுக்கு அருகில் உங்கள் பிள்ளைகளைச் செல்ல அனுமதிக்காதீர்கள். இல்லை என்றால் அவர்கள் ஹங் சம்சிங்-குளாக மாறி விடுவர்.
மஞ்சள் பறவை: வழக்கம் போல முக்கிய ஊடகங்கள் மௌனம் காக்கின்றன.
பால் வாரென்: வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அவற்றில் அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளவர்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டுள்ளனர். இறுதியில் எல்லாம் சீரழியும் போது அமைதிப் பணியாளர்கள் என தங்களை அழைத்துக் கொள்கின்றவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
விஜார்ஜ்மை: அத்தகைய வன்முறைகளுக்கு எதிராக பாத்வாவை வெளியிடாமல் சமயத் தலைவர்கள் எங்கே பதுங்கிக் கொண்டார்கள் ? தூங்கிக் கொண்டிருக்கிறார்களா ?
லம்ப்பொர்கானி: அது விரக்தியின் வெளிப்பாட்டு. மனிதப் பண்புகளும் மரியாதையும் இல்லாத இழி நிலைக்கு மலேசியா தாழ்ந்து விட்டது வெட்கத்தைத் தருகிறது. .
லின்: கற்களுக்கும் முட்டைகளுக்கும் அம்னோவுடன் என்ன தொடர்பு உள்ளது ? கற்கள் அதன் இதயம், முட்டைகள் அதன் மூளை.
அடையாளம் இல்லாதவன்_3f4a: அடுத்த பொதுத் தேர்தலில் குண்டர்தனத்துக்கு முடிவு கட்டுவோம். வாக்குப் பெட்டிகளில் மிதவாதமும் நாகரீகப் பண்புகளும் தழைக்கட்டும்.