‘எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும் ? பாராக் ஒபாமா அமெரிக்க அதிபராகும் சாத்தியம் உண்டு என 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா ?’
மலாய்க்காரர் அல்லாத பிரதமர்- வழக்கத்தைப் பின்பற்றுங்கள் என்கிறார் துங்கு அஜிஸ்
அடையாளம் இல்லாதவன்_3f4a: பக்காத்தான் ராக்யாட் தேர்தலில் வெற்றி பெற்றால் முஸ்லிம் அல்லாத ஒருவர் பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியம் பற்றி யாரும் பேசவே இல்லை. டிஏபி தலைவர் கர்பால் சிங் ஏதேச்சையாக வெளியிட்ட ஒர் அறிக்கையை திசை திருப்பி கதைகளை ஜோடிப்பதற்கு அம்னோ/பிஎன் ஊடகங்களே அரும் பாடுபட்டு வருகின்றன.
பக்காத்தான் ஜனநாயக வழிகளில் தான் அம்னோ/பிஎன் அரசைத் தோற்கடிக்க முயலுகிறது. அதில் என்ன தவறு ?
அரபு எழுச்சி இங்கும் ஏற்படும் என துங்கு அஜிஸ் கவலை கொண்டால் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக அமைதியாக பேரணி நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அளவுக்கு அதிகமாக படை பலத்தைக் காட்டக் கூடாது என துங்கு அஜிஸ் கேட்டுக் கொள்ள வேண்டும்.
பெர்சே 3.0ஐ ஏற்றுக் கொள்ளாததற்கு அரபு எழுச்சியை அடிப்படையாகக் காட்டுவது சொந்த நிழலைக் கண்டு அஞ்சுவதற்கு இணையாகும்.
‘தாங்கள் முற்றுகைக்கு இலக்காகியிருக்கிறோம்’ என்ற எண்ணம் அதற்குக் காரணமா ? அந்தப் பேரணியில் வன்முறையில் ஈடுபட பெர்சே 3.0 எண்ணம் கொண்டிருந்தது என்பதற்கு இது வரையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதனையும் அதிகாரிகள் கைப்பற்றினரா ? அடுத்த தேர்தலில் பக்காத்தான் தோல்வி கண்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான ஆயத்தமே பெர்சே 3.0 எனக் கூறுகின்றவர்கள் பற்றியே துங்கு அஜிஸ் அதிகம் கவலைப்பட வேண்டும்.
பெர்ட் தான்: மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராவது பற்றி துங்கு அஜிஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் நியாயமானவை. என்றாலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அரசமைப்புச் சட்டம் அந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறது.
அரசியல் என்பது எதனையும் சாத்தியமாக்கும். இப்போது இல்லை என்றாலும் அந்த உயர் பதவிக்கு இன அரசியல் முக்கியமான அம்சமாக இல்லாத வேளையில் அது சாத்தியமாகலாம்.
டூட்: துங்கு அஜிஸ் தமது சூழ்நிலையை உணர்ந்து பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இது போன்ற முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
மலேசியாவுக்கு மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியாது என்றும் வரக் கூடாது என்றும் அவர் உண்மையில் நம்பினால் அவர் அர்த்தமுள்ள மனிதராக எனக்குத் தெரியவில்லை.
இனம் அல்லது சமய அடிப்படையில் ஒருவர் இன்னொரு மனிதரை வேறுபடுத்திப் பார்த்தால் அவர் மனுக்குலத்திற்குத் துரோகம் செய்தவராகக் கருதப்பட வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்#07988903: பெரும்பான்மை மக்கள் செய்யும் முடிவே இறுதியானதாக இருக்கும் வேளையில் ஏன் இந்த விஷயங்களை விவாதிப்பதத்கு நேரத்தை வீணாக்க வேண்டும். எந்த இனம் பிரதமராக வேண்டும் என அரசமைப்பு அறுதியிட்டுக் கூறவில்லை. அவர் மலேசியராக இருந்தால் போதும்.
நாட்டின் நடப்பு அரசியல் சூழ்நிலை மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராவதை ஏற்றுக் கொள்வதற்கு பக்குவப்படவில்லை.
‘எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும் ? பாராக் ஒபாமா அமெரிக்க அதிபராகும் சாத்தியம் உண்டு என 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா ?’
டேனி லோ: துங்கு அஜிஸ் சொல்லும் வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் நம் நாட்டு வரலாற்றில் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக இருந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காலத்தில் அம்னோவின் பதிவு ரத்துச் செய்யப்பட்ட போது லிங் சில நாட்களுக்குப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அம்னோவே மலாய்க்காரர் அல்லாத ஒருவரை பிரதமராக நியமித்துள்ளது. ஆகவே முன்னுதாரணம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.