முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தின் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம் வழங்கப்பட்டதில் அந்த அமைச்சர் சம்பந்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது, அம்னோ/பிஎன் ஊழல்களை தூய்மைப்படுத்துவதில் மட்டுமே அந்த ஊழல் தடுப்பு நிறுவனம் ஈடுபடுகிறது என்பதைக் காட்டுவதாக அரசு சாரா அமைப்பு ஒன்று கூறுகிறது.
எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணையின் முடிவுகளை அண்மையில் அதன் நடவடிக்கை மறு ஆய்வுக் குழு அறிவித்துள்ளதில் “வியப்பு ஒன்றுமில்லை என்றும் அது எதிர்பார்க்கப்பட்டதே என்றும்” ஜிங்கா 13ன் ஒருங்கிணைப்பாளர் பேரிஸ் மூசா கூறினார்.
‘ஷாரிஸாட்டைக் காப்பாற்றுவதே’ எம்ஏசிசி-யின் தலையாய கடமையாகும். ஆனால் மக்கள் “அதனால் ஏமாந்து விட மாட்டார்கள்,” என அவர் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
“எம்ஏசிசி -யின் நடவடிக்கைகள் அதன் உண்மையான நோக்கத்தை மெய்பித்துள்ளது. ஊழல் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அம்னோ/பிஎன் தலைவர்களை கறைகளிருந்தும் ‘துடைப்பதே’ அதன் பணியாகும்.
என்றாலும் மக்கள் ஷாரிஸாட் அப்துல் ஜலிலைக் காப்பாறுவதற்கான முயற்சிகளில் எம்ஏசிசி எடுத்துள்ள முடிவுகள் மீது பொது மக்கள் தங்கள் மதிப்பீடுகளைச் செய்து கொள்ள முடியும் என்றார் அவர்.
“அதே வேளையில் அமைச்சருடைய குடும்பம் மீது பிகேஆரும் அந்த அரசு சாரா அமைப்பும் என்எப்சி ஊழல் பல புகார்களை செய்த போதிலும் எம்ஏசிசி விசாரணைகளைத் தாமதப்படுத்தி வருகிறது.”
அது 17 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு விட்ட பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீதான புலனாய்வை எம்ஏசிசி அவசரம் அவசரமாகத் தொடங்கியுள்ளதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது என்றும் பேரிஸ் சொன்னார்.