பக்காத்தான் உட்பூசல் வாக்காளர்களை அதன் மீது வெறுப்படைச் செய்யும்

“நீங்கள் உங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டால் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் மீது வாக்காளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?”

 

 

 

பிகேஆர் டிஏபி-யிடம் சொல்கிறது: சண்டையில் வெற்றி பெறவில்லை. ஆனால் சண்டையில் தோற்கிறோம்

இண்டோன் பிளாண்டர்: பிகேஆர் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் சான் மிங் காய் அவர்களே, இதனை நீங்கள் ஏன் உங்கள் பக்காத்தான் சகாக்களுடன் திரைமறைவில் விவாதிக்கக் கூடாது? நீங்கள் ஏன் பிஎன் -னுக்கு ஆயுதங்களக் கொடுக்கின்றீர்கள்? தேர்தல் துணை இயக்குநர் என்னும் முறையில் இந்த எளிய உண்மை கூட உங்களுக்குத் தெரியவில்லையே?

கேகன்: டிஏபி தன்னை பல இனக் கட்சி என அழைத்துக் கொள்கிறது. ஆனால் எல்லா சீனர் பெரும்பான்மை இடங்களையும் விரும்புகிறது. சீனர் பெரும்பான்மை இடங்கள் எந்தக் கட்சியின் தனியுரிமை இல்லை. வெற்றி என்னும் குறுகிய அம்சத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பக்காத்தானின் பல இன அம்சத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

டிஏபி எல்லா சீனர்-பெரும்பான்மை இடங்களை பிடுங்கிக் கொள்வதற்குப் பதில் சீனர் கட்சி என்னும் தோற்றத்தைக் களைய முற்பட வேண்டும்.

சவுத்பாவ்: டிஏபி-யையும் பாஸ் கட்சியையும் அர்த்தமற்றதாக்குவதற்கு அம்னோ பயன்படுத்துகிற அதே வியூகத்தை பிகேஆர் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பிகேஆர், பிஎன்-னை எதிர்த்து தனியாகப் போட்டியிடுவது நல்லது எனத் தோன்றுகிறது.

நாடோடி: பக்காத்தான் போரில் வெற்றி பெற விரும்பினால் அதன் உறுப்புக் கட்சிகள் கூட்டு முயற்சியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டால் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் மீது வாக்காளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

பக்காததான் ஒருமித்த உணர்வைக் காட்டுவது மிகவும் முக்கியமாகும். ஒன்றுபட்டால் நீங்கள் ஆட்சி புரியலாம். பிளவுபட்டால் அஸ்தமனமே.

பீட்ஸ்டாப்: துரதிர்ஷ்டவசமாக மோசமான வேட்பாளர்கள் பிகேஆர்-டம் தான் உள்ளனர். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள பெரும்பாலான “தவளைகள்” ஏற்கனவே அந்தக் கட்சியைச் சார்ந்திருந்தவர்கள் ஆவர்.

எனவே பிகேஆர் முதலில் தனது கட்சியை துப்புரவு செய்து கொண்டு வேட்பாளர் தேர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். அன்வார் இப்ராஹிம் ஆதரவு பெற்றவர்கள் அல்லது அன்வாருக்கு “கூஜா தூக்குகின்றவர்கள்” என்ற அடிப்படையில் இருக்கக் கூடாது.

ஒப்புநோக்கினால் பாஸ், டிஏபி வேட்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் தங்கள் கட்சியோடு இணைந்துள்ளனர்.

பிகேஆர்-க்கு ஒரு வேண்டுகோள்: ‘நீங்கள் மெல்ல முடிந்த அளவுக்குத்தான் கடிக்க வேண்டும்.’

TAGS: