அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ கார்களுக்கு இலக்கத் தகடுகளை எலத்தில் எடுப்பதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு கிடையாது என்பதை நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.
அதற்காகக் கருவூலம் நிதி ஒதுக்கியதே இல்லை என்று பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சீனமொழி நாளேடான சின் சியு டெய்லி கூறியுள்ளது.
சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்(இடம்) தம் புதிய காருக்கான ‘WWW15’ இலக்கத் தகட்டை ரிம24,200கொடுத்து வாங்கியதற்குக் கொடுத்த விளக்கம் பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அந்த அதிகாரி அவ்வாறு கூறினார்.
ஏலவிற்பனையில் அதைத் தம் அதிகாரிகள் வாங்கியதாகக் கூறிய லியோ,24,000ரிங்கிட்டைக் கொடுத்தது யார் என்ற கேள்விக்கு மறுமொழி கூறுவதைத் தவிர்த்தார்.
அதேவேளை, முன்னாள் அமைச்சர் ஃபோங் சான் ஒன், அமைச்சர்களுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கார்களுக்கு இலக்கத் தகடு இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.
அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுவதால் அதற்கு விலை நிர்ணயிக்கப்படுவதில்லை என்றார்.