“அந்த முடிவு எடுக்கப்பட்ட சில நாட்களிலேயே மாற்றப்பட்டது, கடன்களை முடக்கும் முடிவுக்கு ஆதரவு இல்லை என்பதை காட்டுகிறது”
யூனிசெல், குயிஸ் கடன் முடக்கத்தை பிடிபிடின் மீட்டுக் கொள்கிறது
சிஎச்கேஎஸ்: இலவசக் கல்வியை சிலாங்கூர் அரசாங்கம் வழங்க முடியாது என்ற எண்ணமே பல வழிகளில் தவறானது:
1) முடக்கம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் அதனைச் சமாளிப்பதற்கு அவசரத் திட்டத்தை அறிவித்தார். அதற்காக அதன் சில சொத்துக்கள் விற்கப்படும் என அவர் சொன்னார். உண்மையில் வலுவான திட்டங்கள் தயாரிக்கப்படும் வேளையில் விரைவாக நடவடிக்கை எடுத்த அவருடைய துணிச்சலுக்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.
2) கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வதின் அடிப்படையில் இலவசக் கல்வி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள வேளையில் அந்தக் கடன் முடக்கம், எதிரி தயாராக இல்லாத வேளையில் மறைவுத் தாக்குதல் நடத்துவதற்கு இணையாகும்.
3) இலவசக் கல்வியை வழங்கும் திட்டத்தை அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரையில் கொடுக்கப்பட்டன. குறுகிய நேரத்தில் யார் அத்தகைய திட்டத்தை உருவாக்க முடியும் ? மாணவர் ஒருவரிடம் சிக்கலான கணிதக் கேள்வியை ஒன்று கொடுத்து அதனை படித்துப் பார்ப்பதற்குக் கூட நேரம் கொடுக்காமல் முடிக்குமாறு சொல்வதைப் போன்று இருக்கிறது.
மாணவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை என பிடிபிடிஎன் இனிப்பாக பேசுவதில் அர்த்தமே இல்லை.
1) பக்காத்தானுக்குப் பாடம் புகட்டுவதற்கே அந்த முடக்கம் என உயர் கல்வி அமைச்சர் வெளிப்படையாக அறிவித்த பின்னரே அதன் அறிக்கை வெளியானது.
2) முடக்கத்தின் அளவு அல்லது காலம் என்பது முக்கியமல்ல. பிடிபிடிஎன் போக்குத் தான் கவலை அளிக்கிறது. நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அந்த நடவடிக்கையை அது எடுக்க முடியும் என்றால் அது மாணவர் நலனுக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.
அது இந்த முறையில் சிறிய அளவில் அதனைச் செய்ய முடியும் என்றால் எதிர்காலத்தில் நாடளாவிய நிலையில் அது பெரிதாக மீண்டும் செய்வதை எது தடுக்க முடியும் ?
சக மலேசியன்: முட்டாள்தனமான, சிறுபிள்ளைத்தனமான பழி வாங்கும் நடவடிக்கை தங்களையே திருப்பித் தாக்குவதாக உணர்ந்த பின்னர் பிஎன் தலைவர்கள், மூன்றே நாட்களுக்கு பரிசோதனை நடத்திய பின்னர்- மடத்தனமான தங்கள் நடவடிக்கை பயனற்றது என்பதை ஒப்புக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர்.
சிலாங்கூர் இலவசக் கல்வியை வழங்க முடியாது என்பதை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரகடனம் செய்யும் வரையில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என ஏற்கனவே மருட்டியிருந்ததைப் பார்க்கும் போது அது வெள்ளைக் கொடியை உயர்த்தியது சிலாங்கூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் கேளிக்கை நிகழ்வாக தெரிகிறது.
முடக்கத்தை அறிவித்த சில நாட்களில் அது நீக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள தாக்கம் பொதுத் தேர்தலில் பிஎன் மீது பாதிப்பை ஏற்படுத்தும் .
பெர்ட் தான்: யுனிசெல், குயிஸ் ஆகியவற்றுக்கான பிடிபிடிஎன் கடன் முடக்கத்தை ஆதரித்த துணைப் பிரதமர் முஹைடின் யாசினுக்கு அது சரியான அடியாகும்.
அந்த முடிவு எடுக்கப்பட்ட சில நாட்களிலேயே மாற்றப்பட்டது, கடன்களை முடக்கும் முடிவுக்கு ஆதரவு இல்லை என்பதை காட்டுகிறது.
பிடிபிடிஎன் கடன் முடக்கம் பற்றிய தங்களது அதிருப்தியை தெரிவிக்க மக்கள் இணையத்தை பயன்படுத்தி அதிகமான மக்கள் அறியச் செய்ததே அந்த முடிவு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கான காரணமாகும்.
Fz2379: பிடிபிடிஎன் பற்றி வெளிப்படையாக குறை கூறும் பிகேஆர் தலைவர்கள் சிலாங்கூருக்குச் சொந்தமான பல்கலைக்கழகத்துக்கு அதன் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட போது ஏன் புகார் செய்கின்றனர் ? அவர்கள் போராடுவது அதற்குத் தானே ?
யுனிசெல்-லில் இலவசக் கல்வியை வழங்கும் நடவடிக்கையை எதிர்த்தரப்புத் தொடர வேண்டும். நம்மை ஏமாற்றுவதற்காக அவர்கள் கதைகளைத் திரிப்பார்கள்.
ஐசாக்: 13வது பொதுத் தேர்தலில் அதன் தாக்கம் இருக்கும் என அஞ்சியதால் ‘மிகவும் திறமையான’ பிஎன் அமைச்சர்கள் பின்வாங்கியுள்ளனர். அது மலேசியர்களுக்கு கேளிக்கையாக தெரிகிறது.
அடையாளம் இல்லாதவன்_3e86: யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாமல் இருந்தவர்கள் பிஎன் செய்த முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் இப்போது அதற்கு எதிராக மாறி விட்டனர். அதனால் தான் கடன் முடக்கத்தை பிஎன் உடனடியாக மீட்டுக் கொண்டது.
தங்கள் அரசியல் வாழ்வுக்காக பிஎன் தலைவர்கள் ஏதுமறியாத மாணவர்களையும் தண்டிப்பர் என அனைவரும் அறிந்து கொண்டு விட்டதால் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கொதிப்படைந்துள்ளனர்.
ஜாக் லூ: பிஎன் அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். அரசியல் ஆட்டத்திற்கு நீங்கள் மாணவர்களைப் பயன்படுத்துகின்றீர்கள். நீங்கள் முடிவு செய்யும் வழிகளும் அதனை படுவேகமாக மாற்றுவதும் எங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நாட்டை நல்ல முறையில் நீங்கள் நிர்வாகம் செய்வீர்கள் என நாங்கள் எப்படி நம்ப முடியும் ?