எஸ்ஏஎம்: பினாங்கு அரசாங்கம் தவறியுள்ளதால் வெள்ளம் அதிகமாகும்

பினாங்கு மாநில அரசாங்கம் வெள்ளப் பிரச்னையை தடுக்கத் தவறியுள்ளதால் அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் அதிகமான வெள்ளத்தை எதிர்பார்க்கலாம் என Sahabat Alam Malaysia என்ற சுற்றுச் சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் எஸ் எம் முகமட் இட்ரிஸ் கூறுகிறார்.

வெள்ளத்தைத் தடுப்பதற்கு உருப்படியான அல்லது நிலையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனத் தோன்றுவதாக அவர் உத்துசான் மிங்குவானுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“அவர்களுடைய திட்டம் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கட்டுமான நடவடிக்கைகளை (physical measures) பொறுத்த மட்டில் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.”

“அப்படி எதுவும் இருந்தாலும் அவை தற்காலிகமானவயே. நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் நாம் வெள்ளத்தைப் பார்க்கலாம்,” என அவர் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நிலைக்கு அளவுக்கு அதிகமான வளர்ச்சியும் கடந்த கால நிர்வாகங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள நடப்பு நிர்வாகம் தவறியதும் அதற்குக் காரணம் என இட்ரிஸ் சொன்னார்.

“அவர்கள் (பக்காத்தான்) மாநில அரசாங்கத்தை எடுத்துக் கொண்ட போது அவர்கள் சுற்றுச்சூழல் பிரச்னைகளை பரிசீலிக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களும் பேராசை ஏற்பட்டது. நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் அதிக மருட்டலுக்கு இலக்கானது.”

அந்தத் திட்டங்களை முந்திய அரசாங்கம் அங்கீகரித்ததாக நடப்பு மாநில அரசாங்கம் சொல்வது பற்றிக் குறிப்பிட்ட இட்ரிஸ், “நான் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களும் (பக்காத்தான்) அப்படித் தான்,” என்றார்.

“அண்மையில் மாநில அரசாங்கம் ஜெலுத்தோங் கம்போங் பொக்கோக் அஸாமில் தனியார் நிறுவனம் ஒன்றின் திட்டத்தை மாநில அரசாங்கம் அங்கீகரித்தது. அந்தத் திட்டம் நிலச்சரிவுகள் போன்ற முன்பு எப்போதும் நிகழ்ந்திராத சம்பவங்கள் வழி வகுத்து தங்கள் வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் ஆட்சேபித்ததையும் பொருட்படுத்தாமல் அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது,” என்றார் இட்ரிஸ்.

உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பினாங்கில் சுற்றுச்சூழல் தரம் தொடர்ந்து மோசமடையும் என இட்ரிஸ் எச்சரித்தார்.