சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னை மீதான ஆர்சிஐ சபாவுக்கு மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு அல்ல

சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னை மற்றும் அதனால் தேர்தல் முறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை அறிவித்துள்ள ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் சபா மீது மட்டுமே கவனம் செலுத்தும். மற்ற மாநிலங்களை உள்ளடக்கும் வகையில் அதன் பணிகள் விரிவு செய்யப்பட மாட்டாது.

“அது சபாவுக்கு மட்டுமே. ஆர்சிஐ சபாவுக்காக,” என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் மற்ற இடங்களில் அந்தப் பிரச்னை நிலவவில்லை என அமைச்சர் மேலும் கூறினார்.

தீவகற்ப மலேசியாவில் குறிப்பாக கோலாலம்பூர், ஜோகூர், சிலாங்கூர் ஆகியவற்றில் வாக்குகளுக்காக சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எழுப்பிய துணைக் கேள்விக்கு நஸ்ரி பதில் அளித்தார்.