ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்குப் புத்துயிரூட்டுவதற்காக பினாங்கு மாநிலச் சட்டமன்றம் அண்மையில் நிறைவேற்றிய சட்டம் கூட்டரசுச் சட்டத்துக்கு முரணாக இருப்பதால் அது ‘இயல்பாகவே ரத்தாகி விட்டது’ என வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சோ சீ ஹியூங் கூறுகிறார்.
அந்தப் பினாங்குச் சட்டம், 1976ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றச் சட்டத்தின் 15வது பிரிவுக்கு முரணாக இருப்பதாக சோர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது சொன்னார்.
கூட்டரசு சட்டத்துக்கு முரணாக இருக்கும் எந்த மாநிலச் சட்டமும் இயல்பாகவே ரத்துச் செய்யப்பட்டு விடும் எனக் கூட்டரசு அரசமைப்பின் 75வது பிரிவு கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊராட்சி மன்றங்களுக்குத் தங்களது பேராளர்களை குடிமக்கள் தேர்வு செய்ய அனுமதிக்கும் வகையில் மூன்றாவது வாக்கை கொண்டு வரும் சாத்தியம் பெற்ற கேள்வி எழுப்பிய பிகேஆர் கிளானா ஜெயா உறுப்பினர் லோ வோ பேர்ன்-னுக்கு சோர் பதில் அளித்தார்.