கைரி: பிரதமரது குடும்ப விவகாரங்கள் ‘தேசிய அக்கறைக்குரிய விஷயங்கள்’ அல்ல

பிரதமர் நஜிப் ரசாக்கின் வருங்கால மருமகனைச் சூழ்ந்துள்ள அண்மைய குற்றச்சாட்டுக்கள் உண்மையில் அரசியலாக்கப்பட்டவை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் நிராகரித்துள்ளார்.

அவை ‘தேசிய அக்கறைக்குரிய விஷயங்கள்’ அல்ல என்றும் அவர் சொன்னார்.

மோசடிகள் எனக் கூறப்பட்டுள்ள அந்த விஷயங்கள் “வெறும் குற்றச்சாட்டுக்களே, அவை  றுக்கப்பட்டுள்ளன” என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் மருமகனுமாகிய கைரி சொன்னார்.

அவை எந்த வகையிலும் பிரதமர் தமது பணியைச் செய்வதற்குத் தடங்கலாக இல்லை. அவை சொந்த விவகாரங்கள் ஆகும். அவற்றை அரசியலாக்குவது நியாயமற்றது,” என அவர் நேற்றிரவு பிஎன் இளைஞர் தொண்டர்களைச் சந்தித்த பின்னர் கூறினார்.

ஸ்கார்ப்பியோன் ஊழல் முதல் 24 மில்லியன் ரிங்கிட் வரையில் நஜிப் குடும்பத்தை சூழ்ந்துள்ள பல ஊழல்கள் பற்றியும் கைரியிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த கைரி சொன்னார்: “அவை அரசியலாக்கும் முயற்சிகள், பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடைய தோற்றத்துக்கு களங்கம் விளைவிக்கின்ற முயற்சிகள் என்பதைத் தவிர வேறு எந்த ஊழலையும் நான் காணவில்லை.”

அவை தேசிய அக்கறைக்குரிய விஷயங்கள் அல்ல,” என்றார் அவர்.

பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பொது மக்களுடைய எண்ணங்கள் மீது அந்த ஊழல்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றியும் அவரிடம் வினவப்பட்டது.

“அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் எனத் தாங்கள் மக்களிடம் விளக்கப் போவதாக  அவர் பதில் அளித்தார்.”

“அவை பொது மக்களிடையே தாக்கத்தை விளைவித்தாலும் நாம் அதனை விளக்க வேண்டும். மக்கள் புரிந்து கொள்வர். அது தனிப்பட்ட விவகாரமாகும். அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் தெரிவித்தார்.