மஇகா தலைமையகத்தில் என்னதான் நடக்கிறது?

தேர்தல் காய்ச்சல் கண்டு மற்ற அரசியல் கட்சிகள், மக்களின் மனங்களை கவர்வதற்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மஇகாவோ ஆன்மிக வழியில் வாக்களார்களை கவர்ந்திழுப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தோன்கிறது.

மஇகா தலைமையகத்தில் உள்ள தேசியத் தலைவர் அறையில் சாமி மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் தலைமையக கட்டடத்தின் வாசலில் நீர்த் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி தண்ணீர் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருமாம். சாமி மேடை அமைக்கப்படவேண்டும் என்பது தேசியத் தலைவர் (ஜி. பழனிவேலு) உத்தரவு என்று தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று  கேட்டுக்கொண்ட ஒரு மஇகா தலைவர் குறிப்பிட்டார்.

வாக்குகளை பெறுவதற்கு பழனிவேல் எதையும் செய்வார் என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.

2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இந்தியர் வாக்குகளைப் பெறுவதற்கு மஇகா பெரும்பாடுபடுகிறது.

அதேசமயத்தில் வரும் பொதுத் தேர்தலில் தங்களுக்கு ‘சீட்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக சில மஇகா தலைவர்கள் ‘மந்திரவாதிகளை’ பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், தேசிய தலைவரின் சிபாரிசை பெறுவதற்கு ஒரு சில தலைவர்கள், மஇகா தலைமையகத்திற்கு வெளியே இரவு நேரங்களில் இரகசியமாக சாமி கும்பிடுவதாகவும் கூறப்படுகிறது.

கட்சியில் தாம் நீண்ட காலமாக இருப்பதற்கு குறிப்பிட்ட அந்த தலைவர், இப்படியெல்லாம் நடப்பது இதுதான் முதல் தடவை. புதிதாககவும் இருக்கிறது என்றார்.

– ஃபிரி மலேசியா டுடே

TAGS: