காற்றின் தரம் இன்று நல்ல நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. சுற்றுப்புறத்துறை இன்று காலை சுமார் 7மணிக்கு வெளியிட்ட காற்றுத்தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண் எந்தப் பகுதியிலும் காற்றின் தூய்மைக்கேடு மோசமாக இருப்பதாய்க் காட்டவில்லை.
நேற்று காலை மணி 7-க்கு காற்றுத் தூய்மைக்கேடு மோசமாக இருந்த போர்ட் கிள்ளான், பெட்டாலிங் ஜெயா,கோலா சிலாங்கூர், செராஸ், பத்து மூடா பகுதிகளில் இன்று காலை நிலைமை மேம்பட்டிருந்தது.
சுற்றுப்புறத்துறையின் அகப்பக்கமான www.doe.gov.my-இல் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் காற்றுத்தூய்மைக்கேடு மோசமான அளவில் இருப்பதாகவோ அபாய அளவை எட்டியிருப்பதாகவோ பதிவாக இல்லை.நாட்டின் 88 விழுகாட்டுப் பகுதிகளில் காற்றுத்தூய்மைக்கேடு மிதமான அளவில் இருப்பதாகவும் 12விழுக்காட்டுப் பகுதிகளில் சற்று மோசமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றுத்தூய்மைக்கேடு குறியீட்டு எண் 0-க்கும் 50-க்கும் இடைப்பட்டிருந்தால் காற்றின் தரம் நன்று என்று பொருள்.51-க்கும் 100-க்கும் இடைப்பட்டிருந்தால் மிதமான நிலை. 201-300 ஆரோக்கிமற்றது, 301க்குமேல் அபாயத்தின் அறிகுறி.
– Bernama