65 என்எஸ் பயிற்சியாளர்கள் இன்னமும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்

கோலா நெராங்-கில் உள்ள டூசுன் ரீசோர்ட் முகாமில் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் பயிற்சியாளர்களில் 65பேர்  இன்னமும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கோலா நெராங் மருத்துவமனையில் எச்1என்1-க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தேசிய சேவைப் பயிற்சித் துறை தலைமை இயக்குனர் அப்துல் ஹாடி ஆவாங் கிச்சில் கூறினார்.

“தனித்து வைக்கப்பட்டிருக்கும் பயிற்சியாளர்கள் தங்களுக்குள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஓய்வெடுத்துக்கொள்வதும், உண்பதும், மருந்து உட்கொள்வதுமாக இருக்கிறார்கள்.அவர்களுக்குக் காய்ச்சல் இல்லை ஆனாலும் இருமல் இருக்கிறது.முழுமையாக குணமடைய சில நாள்கள் ஆகலாம்”, என்று டூசுன் ரீசோர்ட்ஸில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

டூசுன் ரீசோர்ட் முகாமில் மொத்தம் 300 பயிற்சியாளர்கள் உள்ளனர்.அவர்களின் பயிற்சி ஜூலை 14-இல் முடிவுக்கு வருகிறது.

காற்றுத்தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண் 100-ஐத் தாண்டினால் புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்று அப்துல் ஹாடி தெரிவித்தார்.95-க்கும்-99க்குமிடையில் இருந்தால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் பயிற்சியாளர்கள் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும்.