கிளந்தான் மந்திரி புசாருக்கு ஹஜ் பயண ஏற்பாட்டை வழங்க முன் வந்தது தொடர்பான விவகாரத்தை மீண்டும் திறக்க முடியும்

கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டிற்கு ஹஜ், உம்ரா பயணங்களுக்கான  ஏற்பாட்டை வழங்க முன் வந்தது தொடர்பான ஊழல் தடுப்பு விசாரணையை மீண்டும் திறக்க முடியும் தொடங்க முடியும்.

அந்த  விவகாரத்திலிருந்து மந்திரி புசாரை எம்ஏசிசி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விடுவித்துள்ள போதிலும் அதனை மீண்டும் விசாரிக்க இயலும் என இன்று சட்டத்துறைக்குப் பொறுப்பான முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

“ஒரு விவகாரத்தில் வழக்குப் போடுவது அவசியமில்லை என கருதப்பட்டாலும் அந்த ஆணையத்தின் நடவடிக்கை மறு ஆய்வுக் குழு அதனை மறுமதிப்பீடு செய்து வழக்கைதப் போடுமாறு கேட்டுக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளது.”

என்றாலும் நிக் அஜிஸ் அந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் எந்த ஒரு வழக்கும் அந்த ஏற்பாட்டை வழங்க முன் வந்த தரப்புக்கு எதிராக தொடுக்கப்பட வேண்டும் எனத் தாம் தனிப்பட்ட முறையில் நம்புவதாகவும் நஸ்ரி குறிப்பிட்டார்.

நிக் அஜிஸுக்கு எதிரான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு அவர் மீது வழக்குத் தொடருவதற்கு எம்ஏசிசி குழுவுக்கு அதிகாரம் உள்ளதா என பிஎன் கோலாக் குராவ் உறுப்பினர் இஸ்மாயில் முகமட் சைட் தொடுத்த கேள்விக்கு நஸ்ரி பதில் அளித்தார்.