அரசாங்கத் தகவல் ஏட்டில் இன்னும் அறிவிக்கப்படாத- 1950ம் ஆண்டுக்கான சட்டத் திருத்தங்களில் ஒன்றான அதன் 114 (ஏ) பிரிவு, இணைய எழுத்தர்கள் கீழறுப்புச் செய்யும் பொருட்டு செய்தி இணையத் தளங்களில் தேச நிந்தனைக் கருத்துக்களை குவித்து விடுவர் என ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணம் தவறானது என வழக்குரைஞர் மன்றத்தின் அரசமைப்புச் சட்டக் குழுத் தலைவர் ஷாரிட்ஸான் ஜொஹான் கூறுகிறார்.
“அந்தக் கருத்துக்கள் செய்தி இணையத் தளத்தின் சர்வரில் (server) காணப்பட்டு ஆனால் அவை வெளி வட்டாரம் ஒன்றிலிருந்து சேர்க்கப்பட்டிருந்தால் அவை அந்த செய்தி இணையத் தளத்தின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அவை அவற்றின் சொந்த கட்டமைப்பிலிருந்து வரவில்லை,” என ஷாரிட்ஸான் சொன்னார்.
அந்த செய்தி இணையத் தளத்தின் இணையத் தொடர்பிலிருந்து அந்தப் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பிரச்னை எழும்.
ஒருவருடைய எந்திரம் அல்லது கட்டமைப்பிலிருந்து வரும் எந்த வெளியீடும் வேறு வகையாக நிரூபிக்கப்பட்டால் தவிர அதன் உரிமையாளரே அந்த வெளியீட்டுக்குப் பின்னணியில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் என 14 (ஏ) பிரிவு கூறுகிறது.
“ஒரு வெளியீட்டில் ஒருவரது படம் அல்லது பெயர் காணப்படும் போது அவர் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் எனக் கருதப்பட வேண்டும்.”
“ஒவ்வொரு கருத்தும் அதன் சொந்தப் படத்தை அல்லது புனை பெயரைப் பெற்றிருக்கும். ஆகவே அவற்றை சேர்த்தவர்களே வெளியீட்டாளர்களாகக் கருதப்படுவர். அந்த சூழ்நிலையில் அது செய்தி இணையத் தளங்களைப் பாதிக்கும் என நான் எண்ணவில்லை,” என்றார் ஷாரிட்ஸான்.
“அந்தத் திருத்தம் புதிய குற்றச்சாட்டு எதனையும் உருவாக்கவில்லை. அது ஒரு நடைமுறை மாற்றமாகும். அரசு தரப்பு தனது வாதத்தை நிரூபிப்பதை அது எளிதாக்குகிறது.”
“அது இயல்பாகவே குற்றவாளி என நிரூபித்து விடும் எனச் சொல்வது சரி அல்ல. காரணம் நிரூபிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களும் உள்ளன.”
“எடுத்துக்காட்டுக்கு தேச நிந்தனை வழக்குகளில் ஒருவர் சொன்னார், இணையத்தில் சேர்த்தார் அல்லது வெளியிட்டார் எனச் சொல்வது அரசாங்கத் தரப்புக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் சொல்வது மட்டும் குற்றமாகி விட முடியாது.”
“அந்தக் கருத்துக்கள் தேச நிந்தனை அம்சங்களைக் கொண்டுள்ளதா என்பது போன்ற பல அம்சங்களை மெய்பிக்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.
ஏற்கனவே வலிமை வாய்ந்த அரசுத் தரப்புக்கு கூடுதல் அதிகாரம்
என்றாலும் அந்தத் திருத்தம் “தேவையற்றது, ஏற்றத்தாழ்வானது” என ஷாரிட்ஸான் வருணித்தார்.
“ஏனெனில் ஏற்கனவே சம நிலை இல்லாத ஆட்டக் களத்தில் அரசு வழக்குரைஞருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்றது. அதற்குப் பதில், அதிகம் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை சட்டம் பாதுகாக்க வேண்டும்.”
அத்துடன் அந்த மாற்றங்கள் நன்மைகளைக் காட்டிலும் தீங்கையே அதிகம் விளைவிக்கும். காரணம் மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். தங்கள் எந்திரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குவர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்தத் திருத்தங்களை மே மாதம் மேலவை ஏற்றுக் கொண்டது. அகோங்-கின் ஒப்புதலுக்காக அவை காத்திருக்கின்றன. ஒப்புதல் அளிக்கப்பட்டதும் அவை அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வரும்.