‘ஆர்டிஎம் முன்கூட்டியே ஒலிபரப்பை பதிவு செய்வது தில்லுமுல்லுகளுக்கு வழி வகுக்கும்’

ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட கட்சி கொள்கையறிக்கைகளை மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் என கட்டுப்படுத்துவது அந்த கொள்கையறிக்கைகள் கத்திரிக்கப்படுவதற்கும் செய்யப்படுவதற்கும் திருத்தப்படுவதற்கு வழி வகுத்து விடும் எனப் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

“இப்போது கூட அரசியல் தலைவர்கள் ஏதாவது சொல்லும் போது அவர்களுடைய அறிக்கைகள் எப்படி கத்திரிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.”

“அது கத்திரிக்கப்படலாம். அது அசலாக இருக்காது. அதன் தொடக்க அர்த்தத்தை அவை வெளியிட மாட்டா,” என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.

வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கொள்கையறிக்கைகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்வதற்கு ஆர்டிஎம் அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் நேற்று வெளியிட்ட அறிக்கை பற்றி முஸ்தாபா கருத்துரைத்தார்.