அம்னோ உறுப்பினர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்துவதற்கு அம்னோ எந்தத் தடை உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா இன்று கூறியிருக்கிறார்.
நாட்டின் முழுமையான அரசியல் முறையில் விவாதங்கள், பண்பாட்டில் ஒரு பகுதி அல்ல என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிக்கை விடுத்துள்ள போதிலும் தடை உத்தரவு ஏதுமில்லை என்றார் அவர்.
“அது பிரதமருடைய கருத்து என நான் எண்ணுகிறேன். ஆனால் கட்டுப்பாடு ஏதுமில்லை. தடை உத்தரவும் இல்லை. பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப்-புடன் தாம் நடத்திய விவாதம் கடைசியாக இருக்கும் என நான் கருதவில்லை,” என இன்று கோலாலம்பூர் பங்சாரில் 30 இளைஞர்கள் கலந்து கொண்ட UndiMalaysia சொற்பொழிவின் போது பின்னர் அவர் சொன்னார்.
பிரதமரது அறிக்கை காரணமான சைபுதின் அண்மையில் நடத்திய விவாதம் கடைசியாக கருதலாமா என பங்கேற்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சைபுதின் பதில் அளித்தார்.