‘பெர்க்காசா தனது சுய லாபத்துக்காக அந்தப் பிரச்னையை மோசமாக்க விரும்புகிறது. அதனை நிறுத்துவதற்கு நமது அரசாங்கத்துக்கு துணிச்சல் இல்லை’
மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் வெளியேற வேண்டும் என பெர்க்காசா விரும்புகிறது
இது வெளியே போகும் வழி: தங்கள் உபசரணை நாடுகளின் அரசியல் விவகாரங்கள் மீது தகவல் கொடுப்பதற்கு எல்லா தூதரகங்களிலும் அரசியல் பிரிவுகள் இயங்குகின்றன. அந்தப் பணி தூதரகங்களின் கடமைகளில் ஒன்றாகும்.
பெர்சே 3.0 பேரணியின் போது என்ன நடந்தது என்பதை நேரடியாக அறிந்து கொள்ள பெரும்பாலான தூதரகங்கள் தங்கள் அரசியல் அதிகாரிகளை நிச்சயம் அனுப்பியிருக்கும். ஆகவே அது பிரச்னையே அல்ல. மலேசிய அதிகாரிகள் அதனை எழுப்பியிருக்கவே கூடாது.
ஒடின்: அந்த மூன்று சிங்கப்பூரர்களும் பேரணியைப் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். பங்கு கொள்வதற்கு அல்ல. ஆனால் பெர்க்காசா தான் நிலைத்திருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.
சின்ன அரக்கன்: பெர்க்காசா எந்த விதமான வெட்கமும் இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அம்னோ/பிஎன் அரசாங்கம் ஊக்கமூட்டுவது மிகவும் அவமானமாக இருக்கிறது.
அதனை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சிங்கப்பூர் கௌரவமான முறையில் அதனை விளக்கி விட்டது. நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது விட்டு விட வேண்டும். ஏன் அந்த விஷயத்தைத் தொடருகின்றீர்கள் ? நமது அண்டை நாட்டுடன் உறவுகள் தான் சீர்குலையும்.
பெர்க்காசா தனது சுய லாபத்துக்காக அந்தப் பிரச்னையை மோசமாக்க விரும்புகிறது. அதனை நிறுத்துவதற்கு நமது அரசாங்கத்துக்கு துணிச்சல் இல்லை.
பெர்சே பேரணியில் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் காணப்பட்டதால் பெர்க்காசா வருத்தமடைந்திருந்தால் அது, அண்மையில் ஜகார்த்தாவில் மலேசியக் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு பதிலடியாக அரசாங்கம் இங்குள்ள இந்தோனிசியத் தூதரை வெளியேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
பெர்க்காசா ஏன் சிங்கப்பூர் மீது மட்டும் தனது ஆத்திரத்தைக் காட்ட வேண்டும் ? அதற்கு நிச்சயமாக அரசாங்கத்திடம் பதில் உள்ளது.
வெற்றிலை பாக்கு: ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு முன்னாள் இந்தோனிசியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து நாம் புகார் செய்கிறோம்.
ஆனால் இப்போது இங்கு கோலாலம்பூரில் சிங்கப்பூர் தூதரகத்திற்கு முன்னாள் வேறு சில கோமாளிகளைக் கொண்டு அதே போன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. அந்த விஷயம் மீது எல்லாத் தரப்புக்களும் விளக்கமளித்து விட்ட போதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மலேசியா ஏபியூ: இப்ராஹிம் அலிக்கும் பரிதாபத்துக்குரிய அவரது கும்பலுக்கும் ஒரு வேண்டுகோள்: அந்தப் பேரணிக்கு இந்தோனிசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் பேரணியைப் பார்வையிட அதிகாரிகளை அனுப்பியுள்ளன. அதனால் அவற்றின் தூதரகங்களுக்கு வெளியிலும் போய் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.
விளையாட வேண்டாம்: மலேசியாவில் டிஏபி அரசாங்கத்தை அமைப்பதற்கு இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது என சிங்கப்பூரர்களிடம் சொல்லுங்கள். அது வரை அவர்கள் ஒதுங்கியே இருப்பது நல்லது.
பிஎன் அதிகாரத்தில் இருக்கும் வரை அது சிங்கப்பூர் பிஏபி-யின் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நியாயமானவன்: கடந்த வெள்ளிக் கிழமை ஜகார்த்தாவில் உள்ள மலேசியா மண்டபத்தின் மீது 50 இந்தோனிசியர்கள் கற்களையும் பலகைத் துண்டுகளை வீசி, பாதுகாவலர் ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். கட்டிடத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
இப்ராஹிம் அலி அவர்களே, மலேசியாவின் நலனைப் பாதுகாப்பதற்கு நீங்கள் அவசியம் இந்தோனிசியாவுக்குச் செல்ல வேண்டும். சிங்கப்பூரை மருட்டுவது உங்களுக்கு எளிதாகும்.