கோரப்படாமல் கிடக்கும் மைகார்டுகளை அதிகாரிகள் எரித்துவிட வேண்டும். அந்த ஆவணங்கள் தயாராக இருப்பது தெரிவிக்கப்பட்டதும் ஒரு வாரத்துக்குள் அவற்றைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்களுக்கு வலியுறுத்த அவ்வாறு செய்ய வேண்டும்.
“அவர்கள் ஒரு வாரத்துக்குள் பெற்றுச் செல்லவில்லை என்றால் பேசாமல் எரித்து விடுங்கள்”, என்று இப்ராகிம் அலி(சுயேச்சை-பாசிர் மாஸ்) இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது குறிப்பிட்டார்.
“சேவைகளில் பிரச்னை என்றால் குறை சொல்வார்கள்.ஆனால், சேவைகள் வழங்கப்படும்போது பயன்படுத்திக்கொள்வதில்லை”, என்றாரவர்.
அவர்,தேசிய பதிவுத்துறை(என்ஆர்டி) வெளியிடும் மைகார்ட் தொடர்பில் உள்துறை அமைச்சிடம் துணைக் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.
இறப்புப் பற்றி போலீசில் பதிவு செய்யப்படும்போது என்ஆர்டி-க்கும் அதை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் இப்ராகிம் அலி முன்மொழிந்தார்.
அப்படிச் செய்தால் என்ஆர்டி-யும் தேர்தல் ஆணையமும் அவற்றின் ஆவணங்களை இற்றைப் படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். வாக்காளர் பட்டியலிலும் இறந்தவர்களின் பெயர்கள் நிறைந்திருக்க மாட்டா.