“இன்றைய சூழ்நிலையில் நமக்கு வேண்டியது உரிமைகளே தவிர; நம்பிக்கையும் பிச்சையும் அல்ல” என பெர்சே இயக்கத்தின் தலைவர் அம்பிகா சீனிவாசன் சூளுரைத்தார். [VIDEO]
அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
நம்பிக்கை என்ற பெயரில் மலேசிய இந்தியர்களுக்குப் பிச்சை போன்று திடீர்ச் சலுகைகள் வழங்குவதைவிட உரிமை மீதிலான திட்டங்கள் சட்டமாக்கப்பட வேண்டும் என அம்பிகா கேட்டுக் கொண்டார்.
வருகின்ற நாட்டின் 13-ஆவது பொதுத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே என்றார்.
பொதுமக்கள் அனைவரும் நூறு விழுக்காடு வாக்காளர்களாகத் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது அம்பிகா சீனிவாசன் அவர்களுக்கு ‘வீரத்திருமகள்’ என்று மகுடம் சூட்டி சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பிகா சீனிவாசன் அவர்களின் உரையை பார்வையிட இங்கே அழுத்தவும்.