அம்னோ தலைவர்: பெர்சே பேரணி லண்டன் கலவரங்களைப் போன்றதல்ல

பெர்சே 2.0 பேரணி லண்டனில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்த கலவரங்களைப் போன்று மாறியிருக்கக் கூடும் என்ற அரசாங்க நிலையிலிருந்து உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா மாறுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

“நான் சட்டவிரோதக் கூட்டங்களை ஒப்புக் கொள்ளவில்லை. என்றாலும் பெர்சே கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளாமலும் இல்லை. அத்துடன் லண்டன் கலவரங்களுடன் பெர்சேயை ஒப்பிடுவதையும் நான் ஏற்கவில்லை”, என இன்று காலை 100 பேர் பங்கு கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் அவர் சொன்னார்.

அமைதியாக ஒன்று கூடுவதற்கு சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையம் தெரிவித்த யோசனையைப் பரிசீலிக்கத் தவறியதின் மூலம் ஜுலை 9 பேரணிக்கான பெர்சே திட்டத்தை எதிர்கொள்ள அரசாங்கம் தவறி விட்டதாக சைபுடின் கூறினார்.

“அமைதியாக எப்படி ஒன்று கூடுவது மீது சுஹாக்காம் தெரிவித்த யோசனையை நாம் விவாதித்திருக்க வேண்டும்”, என அவர் காஜாங்கில் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் தேர்தல் சீர்திருத்தம் மீது ஏற்பாடு செய்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

“சிலர்”, “ஆர்ப்பாட்டம்” என்ற சொல் மீது “ஒவ்வாமை” காட்டக் கூடாது.  ஏனெனில் அவர்கள் கூட “சில சமயங்களில்” ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் அதனை வேறு பெயரில் அழைக்கலாம். என்று அவர் மேலும் சொன்னார்.

பிரதமர்: பெர்சே மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நியாயமானவை

என்றாலும் அரங்கம் ஒன்றில் பேரணி நடத்தப்படுவதை அனுமதிக்கும் நோக்கத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எப்போதும் கொண்டிருந்ததாக சைபுடின் வாதாடினார்.

“ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு மேல் நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை,” என்றார் அவர்.

பெர்சே 2.0ஐ கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் நியாயமானவை என்பதை லண்டன் கலவரங்கள் காட்டுகின்றன என பிஎன் தலைமைத்துவம் ஏகமனதாகக் கருதுவதாக நேற்று நஜிப் பிஎன் உச்சம்னறக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நஜிப் கூறினார்.

அத்தகையை குழப்பம் ஏற்படும் என பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

“ஷா அலாம் அரங்கத்தை” வழங்க முன் வந்தது, ஒரு போதும் மீட்டுக் கொள்ளப்படவில்லை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.