ஹுடுட் தொடர்பில் அம்னோ தெரிவித்த யோசனையை துணை அமைச்சர் நிராகரிக்கிறார்

ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற அம்னோ யோசனையை விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் சுவா தீ யோங் நிராகரித்துள்ளார். ஏனெனில் அது மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாகும்.

“அவர் சாதாரண அம்னோ மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் நான் அவரது அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். பாஸ் தலைவர் ஹாடி அவாங், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் போன்றவர்களுடைய அறிக்கைகளுக்கே நாம் முக்கியத்துவம் கொடுப்பேன்,” என லாபிஸ் எம்பி-யுமான அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என ஜுன் 20ம் தேதி அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த யோசனை பற்றி சுவா கருத்துரைத்தார்.

ஹுடுட் அமலாக்கப்பட்டால் மசீச, பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறும் என்பதை சுவா தெளிவுபடுத்தினார்.

டிஏபி ஹுடுட் யோசனை மீதான தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காரணம் டிஏபி-யின் தோழமைக் கட்சியான பாஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்து தான் ஹுடுட் யோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன.

“ஹுடுட்டை அமலாக்கப் போவதாக நிக் அஜிஸும் ஹாடியும் பல முறை கூறியுள்ளனர். ஆனால் டிஏபி இன்னும் பாஸ் கட்சியுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருகின்றது,” என சுவா குறிப்பிட்டார்.

“அத்துடன் அது பாஸ் இளைஞர் பிரிவிடமிருந்து வரவில்லை. அதன் தலைவரும் ஆன்மீகத் தலைவரும் அதனை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.”

13வது பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெற்றால் மலாய் முஸ்லிம் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என பாஸ் முடிவு செய்துள்ளது மீது டிஏபி-யின் நிலை என்னவென்றும் சுவா வினவினார்.

“அதில் டிஏபி-யின் நிலை என்ன ? அவர்கள் அன்வார் பற்றி மட்டுமே பேசுகின்றனர். தங்களுக்கு தகுதி இருப்பதாக  பதில் அளித்துள்ளது.”

“பாஸ் கட்சியின் கனவுகள் நனவாவதற்கு மட்டுமே டிஏபி உதவுகிறது. ஆகவே டிஏபி-க்கு செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் பாஸ் கட்சிக்குப் போடப்பட்டும் வாக்கு ஒன்றுக்குச் சமமாகும்.”

 

TAGS: