அல்தான்துயா கொலை: கொலையாளிகளின் முறையீடு அக்டோபருக்குத் தள்ளிவைப்பு

மங்கோலிய நாட்டுப் பெண்ணான அல்தான்துயா ஷாரிபூவை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் அதிரடி நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகளின் மேல்முறையீடு மீதான விசாரணை அக்டோபர் 31க்கும் நவம்பர் 1-க்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அம்முறையீடு முதலில் அக்டோபர் 27, 28-இல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபடவிருந்தது.

குற்றவாளிகளில் ஒருவரான தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹாட்ரி, மேல்முறையீட்டில் கூடுதல் விசயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புவதால் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக டிபிபி மனோஜ் குருப்(வலம்) மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

2009-இல் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், அசிலாவும் கார்ப்பரல்  சிருல் அஸ்ஹார் உமரும் 2006 அக்டோபர் 18 இரவு மணி 9.45-க்கும் மறுநாள் அதிகாலை மணி ஒன்றுக்குமிடையில், புஞ்சாக் ஆலாம் வனக்காப்புப் பகுதியில் அல்தான்துயாவைக் கொலை செய்தார்கள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

அசிலா சார்பில் ஒத்திவைப்பதற்கு மனு செய்து கொண்டவர் வழாக்குரைஞர் ஜே.குல்திப் குமார்.

விசாரணைக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட தேதிகள், ஹரி ராயாவை அடுத்து வருவதால் பொருத்தமில்லை என்று கூறிய குல்திப், அசிலாவுன் மேல்முறையீட்டில் கூடுதல் விசயங்களைச் சேர்க்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.