நஜிப் எப்போதாவது இசா எதிர்ப்பு பிரச்சாரம் செய்துள்ளாரா?

“பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களை அறிவித்த பிரதமருடைய அறிக்கையில் ஒர் ஆணவத் தொனி காணப்படுவதாக எனக்குத் தெரிகிறது”

இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியும்

1எம்: “ஷா அலாமில் இன்று உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்களுக்கு செவி சாய்த்ததற்காக பென் -ன்னுக்குத் தான் பெருமை சேர வேண்டும் எனச் சொன்னார்.

மக்களுக்கு செவி சாய்க்க அம்னோவுக்கு ஏன் இவ்வளவு காலம் பிடித்தது ? அது வலுவாக இருந்த நாட்களில் அது ஏன் அதனைச்  செய்யவில்லை. அம்னோ அரசாங்கம் தனது நிலைக்கு மருட்டல் ஏற்படும் வரையில் மக்களுக்கு செவி சாய்க்காத ஆணவப் போக்கை பின்பற்றும் என்பதே உண்மை.

மலேசிய மக்களுக்குத் தான் அதற்கான புகழ் போய்ச் சேர வேண்டும். அம்னோவுக்கோ அல்லது மௌனமாக இருக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கோ அல்ல.

அடையாளம் இல்லாதவன்_3e86: இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியுமா ? அப்படி என்றால் இவ்வளவு ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது இசா-வைப் பயன்படுத்திய பெருமையயும் அது எடுத்துக் கொள்ளலாமே ?  பிஎன் இறுதியில் மக்களுக்கு செவி சாய்க்கிறதா ? இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னர் ? இசா பல ஆண்டுகளுக்கு முன்பே ரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தி: நஜிப் கூறும் வாதத்தைப் பார்ப்போம்: இசா-வை உருவாக்கியது பிஎன். நீதி கேட்பதற்கு வழி இல்லாமல் பலரை அடைத்து வைத்து அது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசா-வை (எந்த விவரமும் இல்லாமல்) ரத்துச் செய்வதாக அது இப்போது அறிவிக்கிறது. அதற்காக அது மார் தட்டிக் கொள்கிறது.

எதற்காக மார் தட்டிக் கொள்ள வேண்டும் ? முதலில் நீங்கள் அறிமுகம் செய்திருக்கவே கூடாத ஒன்றை ரத்துச் செய்ததற்கா ?

சுதந்திர மலேசியா: நஜிப்புக்கு இசா-வை ரத்துச் செய்வதாக அறிவிப்பதற்கு 2009ம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகள் பிடித்தன. பெர்சே 2.0 பேரணி ஆதரவாளர்களை அவர், சிறுமைப்படுத்திய முறைக்காக கண்டிக்கப்பட்ட பின்னரே அவர் அந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பெர்சே ஆதரவாளர்களக் கலைப்பதற்கு முரட்டுத்தனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவருடைய செல்வாக்கு 59 விழுக்காட்டுக்கு சரிந்த பின்னரே அவர் அதனைச் செய்துள்ளார். அத்துடன் பொதுத் தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

மேலே கூறப்பட்ட விஷயங்கள் இல்லாவிட்டால் இசா-வை நஜிப் ரத்துச் செய்வார் என யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள். நம்மை நேற்று பிறந்த குழந்தைகள் என அவர் எண்ணுவதாக தோன்றுகிறது.

நம்பாதவன்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களை அறிவித்த பிரதமருடைய அறிக்கையில் ஒர் அகங்காரத் தொனி காணப்படுவதாக எனக்குத் தெரிகிறது.

கூட்டரசு நிலையில் நாம் ஏன் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது ? மக்களாகிய நாம் அந்த ‘பேயுடன்’ 50 ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம். எதிர்க்கட்சிகள் பொறுப்புக்கு வந்தால் அதை விட மோசமாகவா இருக்கப் போகின்றது ?

கோமாளி: இசா ரத்துச் செய்யப்பட்டு விட்டதா ? ஏதாவது செய்யப்பட்டுள்ளதா அல்லது வெறும் அறிவிப்புக்கள் தானா ? பிஎன் -னும் பிரதமர் நஜிப் ரசாக் முட்டைகள் பொறிப்பதற்கு முன்னரே கோழிக் குஞ்சுகளை எண்ணுவதாகத் தெரிகிறது.

கறுப்பு மம்பா: பிஎன் தனது நன்மைக்காக இசா-வை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. பொது மக்களுடைய எதிர்ப்பு வலுவடைந்து வருவதால் அடுத்த பொதுத் தேர்தலில் அதன் தாக்கம் ஏற்படும் என அஞ்சி பிஎன் இசா சட்டத்தை ரத்துச் செய்ய முயலுகிறது.

கேஎஸ்என்: கடந்த பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள், பெர்சே, வழக்குரைஞர் மன்றம், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவை இசா சட்டம் நீக்கப்பட வேண்டும் எனப் போராடி வந்துள்ளன. அவற்றுக்குத் தான் அந்தப் பெருமை சேர வேண்டும்.

குரல்: அந்தச் சட்டத்தை நீக்கிய பெருமை பிஎன் அரசாங்கத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும் என நஜிப் கூறுவதால் கடந்த பல தசாப்தங்களாக மக்களுக்கு செவி சாய்க்காமல் அதனை வைத்திருந்து மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய பொறுப்பையும் அது ஏற்க வேண்டும்.

வீரா: நஜிப் அவர்களே நீங்கள் வேடிக்கையான மனிதர். மலாயா கம்யூனிஸ்ட் கட்சியுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டதும் இசா-வை பிஎன் நீக்கியிருந்தால் அதற்கான பெருமை அதற்குக் கிடைத்திருக்கும். இசா சட்டத்தை எதிர்ப்பை ஒடுக்குவதற்குப் பயன்படுத்திய பின்னர் அதனை ரத்துச் செய்வதாக அறிவிப்பதில் எந்தப் புகழும் இல்லை.

சுதந்திரமானவன்: எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் பொருட்டு இசா சட்டத்தை நீட்டித்தற்கு பிஎன் கூட்டணியே பொறுப்பு என்பதை நஜிப் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

மக்கள் மற்றும் பக்காத்தான் நெருக்குதல் இல்லாவிட்டால் பிஎன் எதிர்க்கட்சிகளை மருட்ட அதனைத் தொடர்ந்திருக்கும். ஆனால் இன்னும் காட்சி முடியவில்லை. இன்னும் அதிகமான ஒடுக்குமுறைகளைக் கொண்ட இசா இன்னொரு பதிப்பு வெளியாகலாம்.

அனிதா ஷாஹாருதின்: ஒரு திருத்தம் அதற்கு பிஎன் காரணமல்ல. நஜிப் மட்டும் தான். இந்தத் துணிச்சலான முடிவுக்கு நாம் நஜிப்பையே பாராட்ட வேண்டும். அந்த முடிவை அறிந்து தாம் கூட வியப்படைந்ததாக துணைப் பிரதமரே சொல்லியிருக்கிறார்.

TAGS: