வலிவற்ற வாதத்தால் மண்ணைக் கவ்வினார் சுவா

“மசீச தலைவரால் அரசாங்கப் புள்ளிவிவரங்களைத்தான் எடுத்து வைக்க முடிந்தது. வினாக்களுக்கு சரியானபடி விடையளிக்கவில்லை சிக்கலானவற்றுக்குப் பதிலளிப்பதையே தவிர்த்து விட்டார்.”

 

சொய் லெக், குவான் எங் வாதம் 2ஆம் சுற்று

கல்பாஸ்க்யின்:இந்த வாதத்தின் முடிவு 10-0.டிஏபி தலைமைச் செயலாளரே வாதத்தில் வென்றார்.சுவா, தாலம் கார்ப்பரேசன், துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி, பினாங்கு துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டுவந்தது அவருக்குப் பாதகமாக அமைந்தது.

ஜோகூர், கிள்ளான் துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது பினாங்கு துறைமுகத்தின் செயல்திறன் குறைந்திருப்பதற்கு மத்திய அரசு அதன் சரக்குகள் எல்லாவற்றையும் ஜோகூர், கிள்ளான் துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பதே காரணம் என்பதை சுவா குறிப்பிடவில்லை அல்லது வேண்டுமென்றே மறைத்து விட்டார்.

லிம் குவான் எங்கு(எல்ஜிஇ) டார் கல்லூரிக்கு மாணவர் தங்கு விடுதி கட்ட ரிம30மில்லியன் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றி இன்னும் சற்று விரிவாக பேசியிருக்கலாம்.மசீச அந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்ள மறுத்தது.ஏனென்றால் மசீச-வுக்கு வேண்டியவர்கள் கம்பாரில் நிறைய வீடுகளை வாங்கி வைத்துக்கொண்டு அறை ஒன்றுக்கு ரிம450 வாடகை வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.இந்த நன்கொடையை வாங்கி தங்குவிடுதிகள் கட்டினால் மசீசவுக்கு வேண்டியவர்கள் நொடித்துப் போவார்களே என்றுதான் அதை மசீச ஏற்கவில்லை.

எல்ஜிஇ கெட்டிக்காரர். மலாய்க்காரரிடையேயும் டிஏபி வரவேற்பு பெற்று வருவதால் பகாசா மலேசியாவிலும் நிறையவே பேசினார்.எல்ஜிஇ பேசுவதற்கு தேசிய அளவில் மேடை அமைத்துக்கொடுத்த மசீசவின்  மடத்தனமான செயலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பீட்டர் பார்க்கர்: டார் கல்லூரி என்றால் என்ன?வரியெல்லாம் கட்டிய பின்னரும் பொதுப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையில்   மேலும் கூடுதல் பணத்தை நன்கொடைகளாக வழங்கிச் சீனர்கள் உயர்கல்வி கற்பதற்காக அமைக்கப்பட்டதுதான் டார் கல்லூரி.

மலேசியாவின் ஒதுக்கப்பட்டவன்: மசீச ஆதரவாளர்கள் சகித்துக்கொண்டிருப்பதையும் இரண்டாம்தர  குடிமக்கள் என்ற நிலையை ஏற்றுக்கொண்டிருப்பதையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.டார் கல்லூரியைச் சுட்டிக்காட்டி பெருமிதம் கொள்வதில் பொருளில்லை, வரிசெலுத்துவோர் என்ற முறையில் தெருவில் இறங்கிக் கல்விபெறும் உரிமைக்காகக் கோரிக்கை விடுக்க வேண்டும்.

திறமையான வாக்காளன்: மசீச சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள்.50ஆண்டுகளாக கடமையில் தூங்கிய இவர்களை நீண்டகாலத்துக்குமுன்பே துரத்தி அடித்திருக்க வேண்டும்.

டார் கல்லூரியைக் காண்பித்து பாராட்டு பெற முடியாது.இப்போது கல்வி நிலவரமே வேறே. தொழிலில் காணப்பட்டுள்ள வெற்றிக்காகவும் மசீச உரிமை பாராட்ட முடியாது.சீனர்களில் பலர் உதவி ஏதுமின்றி சுயமாக முன்னுக்கு வந்தவர்கள்.

அரசுதொடர்புடைய நிறுவனங்கள்(ஜிஎல்சி), வாகன உற்பத்தி, வங்கிகள், போக்குவரத்து எனப் பொருளாதாரத் துறையின் பெரும்பகுதியை தங்கள் வசம் வைத்திருக்கின்றன.அவற்றின் தலைமை செயல் அதிகாரிகளில் எத்தனை பேர் பூமிபுத்ரா-அல்லாதார்.

ஆகக் கூடி, மசீச தோற்றுப்போய்விட்டது. தோல்வியை ஒப்புக்கொண்டு மிச்சம்மீதியுள்ள தன் உறுப்பினர்களை யார் வேலை செய்கிறார்களோ அவர்களை ஆதரிக்குமாறு அது  கேட்டுக்கொள்ள வேண்டும்.

பெயரிலி #32993250:மசீச, அம்னோவுடன் போராடி டார் கல்லூரியை அமைத்திருக்க வேண்டியதில்லை.அதன் பட்டயங்களை(டிப்ளோமா)ஜேபிஏ(பொதுச் சேவைத்துறை) ஏற்பதில்லை.

அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் டிப்ளோமாக்களைவிட மேலானது என்றாலும்கூட இந்நிலை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இப்போது அதற்கு பிரதமர் நஜிப் அங்கீகாரம் வழங்கியதை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் அரசியலாக்கி எதிர்க்கிறார். ஏன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

மசீச தலைவரைக் கேட்கிறேன், இப்படிப்பட்ட சிந்தனைப்போக்குக் கொண்ட பிஎன் கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக தொடர்ந்து இருக்கத்தான் வேண்டுமா?

ஓடின்:நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது “வழக்கமானதுதான்” என்கிறார் சுவா சொய் லெக். உலகமே ஏற்றுக்கொள்ளும் வகையில் மலேசியக் கல்வி அதன் குடிமக்களை உருவாக்கி வைத்துள்ளதாம்.

அப்படியானால், மற்ற நாடுகளில் சென்று வேலை செய்வதற்காகத்தான் மலேசிய அரசாங்கம் மலேசியர்களுக்குக் கல்வி வழங்குகிறதா?

முன்னாள்-மசீச ஆள்: இந்தச் சுற்றில்  லிம் எங் குவான்தான் வென்றார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மசீச தலைவரால் அரசாங்கப் புள்ளிவிவரங்களைத்தான் எடுத்து வைக்க முடிந்தது.வினாக்களுக்கு சரியானபடி விடையளிக்கவில்லை சிக்கலானவற்றுக்குப் பதிலளிப்பதையே தவிர்த்து விட்டார்.

தப்பிப்பிழைத்தவன்: மசீச அரசாங்கத்தில் பொறுப்பேற்று கடந்த காலத்தில் செய்த சாதனைகள் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார் சுவா சொய் லெக்.டிஏபி-ஆல் அப்படி எதையும் காண்பிக்க இயலாது என்கிறார்.அது சரிதான்.ஆனால், டிஏபி மத்திய அரசாங்கத்தில் பொறுப்பு வகித்ததில்லையே.அதை அவர் மறந்துவிட்டாரே.

குரல்: கடைசி கடைசியாக, பிஎன் ஆட்சியில் ஊழல் என்ற வகையிலும் விரயம் என்ற வகையிலும் ஏற்பட்ட இழப்பு ரிம26பில்லியன் என்பதை பிஎன் அமைச்சர் ஒருவரே ஒத்துக்கொண்டிருக்கிறார்.

 

 

 

TAGS: