சிலாங்கூர் 120 மில்லியன் ரிங்கிட் துணை வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று 120.1 மில்லியன் ரிங்கிட் பெறும் துணை வரவு செலவுத் திட்டத்தை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை அதன் 24 துறைகளில் நிறுவனங்களிலும் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கான 13 விழுக்காடு சம்பள உயர்வுக்கு செலவு செய்யப்படும்.

மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று காலை சட்டமன்றத்தில் துணை வரவு செலவுத் திட்ட மசோதாவைச் சமர்பித்தார். எஸ்எஸ்எம் என்ற மலேசிய சம்பள முறைக்கு இணங்க சம்பள உயர்வு கொடுக்கப்படுவதாக அவர் அப்போது சொன்னார்.

“அரசாங்க ஊழியர்களுக்கு எஸ்எஸ்எம் அடிப்படையில் வழங்கப்பட்ட 13 விழுக்காடு சம்பள உயர்வுக்கும் 80 ரிங்கிட்டுக்கும் 320 ரிங்கிட்டுக்கும் இடையிலான ஆண்டு சம்பள உயர்வுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அலவன்ஸுக்கும் செலவு செய்ய கூடுதல் ஒதுக்கீடு தேவைப்படுகிறது,” என அவர் சொன்னார்.

.